

மேஷம்: கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி தங்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பர். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் சிலருக்கு பதவி உயர்வு கிட்டும். பொறுப்புகள் கூடும்.
ரிஷபம்: சோர்வு நீங்கி உற்சாகமாக புது முயற்சிகளில் இறங்குவீர். தம்பதிக்குள் அன்யோன்யம் கூடும். வீடு, மனை விற்பது, வாங்குவது லாபகரமாக அமையும். வாகனம் செலவு வைக்கும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருக்கவும். வியாபாரம் சிறக்கும்.
மிதுனம்: குடும்பத்தினரால் மனநிம்மதி கிட்டும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வெளிவட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிட்டும். வியாபாரரீதியாக பயணம் மேற்கொள்வீர். பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் இழுபறியான வேலைகளை முடிப்பீர்.
கடகம்: இனம்தெரியாத சின்னச் சின்ன கவலைகள் வந்து போகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் நிதானம் தேவை. புதிய பங்குதாரர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். உத்தியோகம் சிறக்கும்.
சிம்மம்: வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. பழைய மகிழ்ச்சிகரமான சம்பவம், சாதனைகளை நினைத்துக் கொள்வீர். தந்தைவழியில் உதவிகள் கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு.
கன்னி: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம். பங்குதாரர்கள் ஆதரிப்பர்.
துலாம்: சுபநிகழ்ச்சிகள், விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். தாய்வழி உறவினர்கள் மதிப்பர். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும். வியாபாரம் லாபம் தரும்.
விருச்சிகம்: தம்பதிக்குள் இருந்த மனஸ்தாபம் நீங்கும். முகப் பொலிவு கூடும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர். எதிர்பார்த்த இடத்திலிருந்து தக்க சமயத்தில் உதவிகள் கிட்டும். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து நடக்கவும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்.
தனுசு: குடும்ப உறுப்பினர்களுடன் சென்று குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். இல்லத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர். பூர்வீக சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
மகரம்: தம்பதிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. விவாதங்களை தவிர்ப்பீர். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். உறவினரால் சங்கடங்கள் வரும். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர். அலுவலகத்தில் மேலதிகாரிகள் ஆதரிப்பர்.
கும்பம்: குடும்பத்தாரின் பேச்சுக்கு செவி சாய்ப்பீர். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். அக்கம் - பக்கத்தினர் நேசக்கரம் நீட்டுவர். பணவரவு உண்டு. வியாபாரத்தில் பங்குதாரரின் ஆலோசனையை கேட்டு நடக்கவும். அலுவலகத்தில் மதிப்பு கூடும்.
மீனம்: வங்கியில் அடமான வைத்த பொருட்களை மீட்பீர். மனைவி வழியில் மதிப்பு கூடும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். செலவு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது வழிமுறைகளை கையாளுவீர்கள். குழப்பங்கள் நீங்கி அலுவலகத்தில் நிம்மதி பிறக்கும்.