

மேஷம் : வீட்டு உபயோகப் பொருட்கள், மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் நேர்முக, மறைமுகப் போட்டிகள் விலகும் உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள்.
ரிஷபம் : மனதில் இருந்த அச்சம், கவலை, குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். பெற்றோருக்கு இருந்த அசதி, சோர்வு நீங்கும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள்.
மிதுனம் : எடுத்த வேலையை போராடி முடிப்பீர்கள். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் நிதானம் தேவை. நாடி வந்தவர்களுக்கு உங்களால் இயன்ற உதவியைச் செய்வீர்கள்.
கடகம் : சுறுசுறுப்புடன் செயல்பட்டு முக்கிய வேலைகளை முடிப்பீர் கள். சொந்த ஊரில் இருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வராது என்றிருந்த பாக்கிகள் வரும். உத்தியோகத்தில் வேலைகளை சுறுசுறுப்பாக முடித்து பாராட்டு பெறுவீர்கள்.
சிம்மம் : எதிர்பார்த்தபடி சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்கு விட்டுக்கொடுத்துச் செல்வீர்கள். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. புதிய ஆர்டர்கள் தேடி வரும்.
கன்னி : எடுத்த வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர்களைக் கண்டறிவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரியின் ஆதரவு உண்டு. ஆன்மிக நாட்டம் கூடும்.
துலாம் : குடும்பத்தினருடன் கலந்துபேசி பழைய பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். தொழில் ரீதியாக சில விஐபிகளை சந்திப் பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். எக்காரியத்திலும் பொறுமை தேவை.
விருச்சிகம் : எதிர்பாராத பயணங்களால் ஆதாயம் உண்டு. உற்சாகம், தோற்றப் பொலிவு கூடும். விஐபிகளின் நட்பும், அதனால் அனுகூலமும் கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் கூடும்.
தனுசு : மனக் குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை, அந்தஸ்து கூடும். பண வரவு, பொருள் வரவால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மகரம் : உறவினர்கள், நண்பர்களால் தேவையற்ற செலவுகள் வரக் கூடும். நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பத்தில் அமைதி தங்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. வாகனப் பயணத்தில் கவனம் தேவை. கலைப் பொருட்கள் சேரும்.
கும்பம் : நண்பர்கள் உரிய நேரத்தில் உதவுவார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வீடு, கடையை விரிவுபடுத்திக் கட்டு வீர்கள். ஆன்மிகம், தியானத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
மீனம் : உங்களது வித்தியாசமான அணுகுமுறையால், பழைய பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பெரிய பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.