

மேஷம் : புது திட்டங்கள் தீட்டுவீர். பழைய நண்பர்கள் தேடி வருவர். தாயாரின் மருத்துவச் செலவு குறையும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். பங்குதாரர்கள் ஆதரிப்பர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
ரிஷபம் : தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.
மிதுனம் : தாய்வழி உறவினர்களால் மனக்கசப்பு வந்து போகும். முன்கோபத்தை தவிர்க்கவும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரத்தில் அவசர முடிவு வேண்டாம். பங்குதாரரை அனுசரித்து நடக்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
கடகம் : பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். பூர்வீகச் சொத்துப் பிரச்சினையை பேசித் தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு பழைய வாடிக்கையாளர்களைக் கவருவீர். அலுவலகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள்.
சிம்மம் : வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பம் நீங்கும். சொந்த ஊர் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்.
கன்னி : சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். உறவினர்களுக்காக மற்றவர் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் புது சரக்குகள் வந்திறங்கும். அலுவலக ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்க வேண்டி வரும்.
துலாம் : குற்றம் குறை கூறியவர்கள் இனி வலிய வந்து பேசுவார்கள். வீட்டில் நல்லது நடக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். பங்குதாரரின் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவது நன்மை தரும். அலுவலகத்தில் உயரதிகாரி நேசக்கரம் நீட்டுவார்.
விருச்சிகம் : மனைவிவழியில் பண உதவி கிடைக்கும். நவீன மின்னணு சாதனங்களை வாங்குவீர். வாகனப் பழுது நீங்கும். வியாபாரரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
தனுசு : திட்டமிட்ட பணிகளை முடிப்பதில் தடுமாற்றம் ஏற்படும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். பூர்வீக சொத்து தொடர்பான வழக்கில் இருந்த இழுபறி நீடிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் தொந்தரவு தருவார்கள். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.
மகரம் : தள்ளிப் போய் கொண்டிருந்த சில பணிகளை முடிப்பீர். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவர். அலுவலக ரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
கும்பம் : தள்ளிப் போய்க் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிகள் கைகூடி வரும். குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வீர். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் உண்டு. பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவர். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் பிரபலங்களை சந்திப்பீர்கள்.
மீனம் : குடும்பத்தாரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர். தந்தை வழியில் இருந்து வந்த மனஸ்தாபங்கள் விலகும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர். அலுவலகத்தில் உயரதிகாரிகள் உங்களை கலந்து ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள்.