

மேஷம்: தெளிவாக பேசி சில வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் கூடும். வங்கியில் வாங்கிய கடனை பைசல் செய்வீர்கள். அலுவலகத்தில் நிம்மதி கிட்டும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெல்வீர்.
ரிஷபம்: குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து போகவும். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுவது நல்லது. சொந்த ஊர் விசேஷங்களில் முதல் மரியாதை கிட்டும். வியாபாரத்தில் பங்குதாரர் களை அனுசரித்து நடக்கவும். அலுவலகத்தில் அலைச்சல் இருக்கும்.
மிதுனம்: பிரபலங்கள் சிலரை சந்திப்பதால் உங்கள் வாழ்வில் சில மாற்றங்கள் வர வாய்ப்பு உண்டு. யோகா, ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். அலுவலகத்தில் அமைதி காப்பது நன்மை தரும். வியாபாரம் சிறக்கும். வேலையாட்கள் உதவிகரமாக நடப்பார்கள்.
கடகம்: தடைபட்டுக் கொண்டிருந்த வேலைகள் இன்று முடிவுக்கு வரும். சகோதரர்களால் பயனடைவீர். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர். அலுவலக ரீதியாக பயணம் செய்ய வேண்டி வரும். மேலதிகாரி ஆதரிப்பார்.
சிம்மம்: தட்டு தடுமாறிக் கொண்டிருந்த நிலை மாறி தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். தாய்வழியில் ஆதரவு உண்டு. பூர்வீக வீடு, மனை, விவசாய நிலத்தை விற்க முயற்சிப்பீர். வியாபாரரீதியாக வெளியூர் பயணம் மேற்கொண்டு முக்கிய அதிகாரிகளை சந்திப்பீர்கள்.
கன்னி: குடும்பத்துடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர் கள். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் கிடைப்பார். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும்.
துலாம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். குழப்பம் நீங்கி குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். அலுவலக ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு உண்டு.
விருச்சிகம்: நம்பிக்கைக்கு உரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். நண்பர்கள் வீடு தேடி வருவர். வாகனத்தை மாற்றுவீர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.
தனுசு: கணவன் மனைவிக்குள் விட்டுக்குக் கொடுத்து போகவும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. பூர்வீக வீடு விற்பனையாகும். ஊர் விசேஷங்களுக்கு தலைமை தாங்குவீர். அலுவலகத்தில் கவனம் தேவை. வியாபாரம் சூடு பிடிக்கும். போட்டிகள் அதிகரிக்கும்.
மகரம்: மறைமுக எதிர்ப்புகள் விலகும். உங்களின் செயலை பார்த்து மற்றவர்கள் வியப்பார்கள். குழப்பம் நீங்கி குடும்பத்தில் நிம்மதி தங்கும். வியாபாரத்தில் புது இடத்துக்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். மேலதிகாரி பாராட்டுவார்.
கும்பம்: தடைபட்டுக் கொண்டிருந்த சுபகாரியங்கள் ஏற்பாடாகும். கையில் பணம் புரளும். தாயாரின் உடல் நலத்தில் அக்கறை காட்டவும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அலுவலகத்தில் போட்டிகளை தகர்ப்பீர். வியாபாரத்தில் லாபம் உண்டு.
மீனம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். பணப்புழக்கம் கூடும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பர். வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்.