மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 31 ஆகஸ்ட் 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 31 ஆகஸ்ட் 2026
Updated on
2 min read

மேஷம்: இழுபறி​யாக இருந்த வேலைகள் முடி​யும். பெற்றோர் உடல்​ நலம் சீராகும். அரசு, வங்கி சம்​பந்​தப்​பட்ட காரி​யங்​கள் சாதக​மாக முடி​யும். தொழில், வியா​பாரத்​தில் புதிய வாடிக்​கை​யாளர்​கள் தேடி வருவார்​கள். சரக்​கு​கள் விற்​றுத் தீரும்.

ரிஷபம்: உங்​கள் மனம் விரும்​பிய புதிய பாதை​யில் பயணிக்​கத் தொடங்​கு​வீர்​கள். பண வரவு உண்​டு. கணவன் - மனை​விக்​குள் மனம்​விட்​டுப் பேசுவீர்​கள். உங்​கள் ரசனைக்​கேற்ப வீடு, வாக​னம் அமை​யும். வியா​பாரம் லாபம் தரும். பேச்​சில் நிதானம் தேவை.

மிதுனம்: உங்​களது எதார்த்​த​மான, சாதுர்​ய​மான பேச்​சால், தடை பட்ட காரி​யங்​களை முடிப்​பீர்​கள். குடும்​பத்​தினரின் ஆதரவு பெரு​கும். பிள்​ளை​கள் உடல்​நலம் சீராகும். வியா​பாரத்​தில் பணி​யாளர்​கள் அனுசரணை​யாக நடந்து கொள்​வார்​கள்.

கடகம்: புதி​ய​வர்​களு​டன் நட்பு மலரும். பண வரவு திருப்​தி​கர​மாக இருக்​கும். வியா​பாரத்​தில் பழைய பாக்​கி​கள் வசூலாகும். கொடுக்​கல் - வாங்​கலில் சுமுக​மான நிலை காணப்​படும். வாக​னப் பழுது நீங்​கும். கேட்ட இடத்​தில் உதவி கிடைக்​கும்.

சிம்​மம்: மனதில் இருந்த அச்​சம், கவலைகள் நீங்​கி, நம்​பிக்​கை​யும், உற்​சாக​மும் பிறக்​கும். கணவன் - மனை​விக்​குள் மனஸ்​தாபம் நீங்​கி, அன்​யோன்​யம் அதி​கரிக்​கும். வியா​பாரத்​தில் பழைய சரக்​கு​களை விற்று காசாக்​கு​வீர்​கள். அலு​வல​கத்​தில் நிம்​மதி உண்​டு.

கன்னி: யாருக்​கும் ஜாமீன் தரு​வது, சாட்​சிக் கையெழுத்​திடு​வது, வேலைக்கு சிபாரிசு செய்​வது வேண்​டாம். பழைய பிரச்​சினை​களுக்கு சுமுக தீர்வு காண்​பீர்​கள். வாக​னம் அடிக்​கடி தொந்​தரவு தரும். ஆன்​மிகம், தியானத்​தில் ஈடு​பாடு அதி​கரிக்​கும்.

துலாம்: புதி​ய​வர்​களின் நட்பு கிடைக்​கும். தள்​ளிப்​போன வழக்​கில் சாதக​மான திருப்​பம் வரும். அரசு, வங்கி காரி​யங்​கள் விரைந்து முடி​யும். புதி​ய​வர்​களின் அறி​முக​மும், அதனால் அனுகூல​மும் கிடைக்​கும். பல வகை​யிலும் பொருட்​கள் சேரும்.

விருச்​சிகம்: குடும்​பத்​தில் உங்​கள் வார்த்​தைக்கு மதிப்பு கூடும். புதிய பதவி​கள், பொறுப்​பு​கள் தேடிவரும். உறவினர்​கள், நண்​பர்​கள் வரு​கை​யால் வீட்​டில் மகிழ்ச்சி நில​வும். உத்​தி​யோகத்​தில் சக ஊழியர்​கள் ஆதர​வாக இருப்​பார்​கள்.

தனுசு: முக்​கிய பிர​முகர்​களின் அறி​முகம் கிடைக்​கும். எதிர்​பார்த்த பணம் கைக்கு வரும். பிள்​ளை​கள் உங்​கள் பேச்​சைக் கேட்டு நடப்​பார்​கள். தொழில், வியா​பாரத்தை விரிவுபடுத்​து​வீர்​கள். அலு​வல​கத்​தில் வேலைச் சுமை குறை​யும்.

மகரம்: எதிர்​மறை எண்​ணங்​கள் மறை​யும். முகத்​தில் தெளிவு பிறக்கும். கையில் காசு பணம் புரளும். நண்​பர்​கள் வரு​கை​யால் வீடு களை​கட்​டும். உத்​தி​யோகத்​தில் சக ஊழியர்​கள் ஆதர​வாக இருப்​பார்​கள். குலதெய்​வப் பிரார்த்​தனை​கள் நிறைவேறும்.

கும்​பம்: பண வரவால் பழைய கடனை அடைப்​பீர்​கள். குடும்​பத்​தில் உங்​கள் பேச்​சுக்கு மதிப்பு கூடும். பிள்​ளை​கள் உடல்​நலம் சீராகும். வாக​னச் செலவு குறை​யும். வியா​பாரத்​தில் போட்​டிகள் குறை​யும். நாடி வந்​தவர்​களுக்கு உதவுவீர்​கள்.

மீனம்: வீண் பிரச்​சினை​களில் சிக்​காமல் இருங்​கள். பழைய கசப்​பான சம்​பவங்​கள் பற்றி யாரிட​மும்​ பேச வேண்​​டாம்​. வி​யா​பாரத்​தில்​ லாபம்​ உண்​டு. ஆன்​மிகம்​, யோ​கா​வில்​ ​நாட்​டம்​ ஏற்​படும்​. வீட்​டு உபயோகப்​ பொருட்​கள்​, மின்​னணு ​சாதனங்​கள்​ ​வாங்​குவீர்​கள்​.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 31 ஆகஸ்ட் 2026
ஜோதிட நாள்காட்டி 31.08.2026 | ஆவணி 14 - திங்கள்கிழமை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in