மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 13 ஜனவரி 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 13 ஜனவரி 2026
Updated on
2 min read

மேஷம்: உடல்சோர்வு, வயிற்றுப் பிரச்சினைகள் வந்து போகும். குடும்பத்தினரை அனுசரித்துப் போகவும். செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் அதிக அலைச்சல் இருக்கும். அலுவலகத்தில் பிறர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்த்துவிடவும்.

ரிஷபம்: வெளிவட்டார தொடர்பு சாதகமாக அமையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். குழப்பங்கள் நீங்கி வீட்டில் அமைதி தங்கும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

மிதுனம்: மனக் குழப்பங்கள் நீங்கி உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். இளைய சகோதர வகையில் உதவியுண்டு. நண்பர்களை சந்திப்பீர். வியாபாரத்தில் பழைய சரக்குகள் அனைத்தும் விற்றுத் தீரும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பர்.

கடகம்: நீங்கள் எடுக்கும் தைரியமான முடிவுகளை குடும்பத்தினர் பாராட்டுவர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். பால்ய நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். முகப்பொலிவு, ஆரோக்கியம் கூடும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம். உத்தியோகம் சிறக்கும்.

சிம்மம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு தடைகளை உடைப்பீர். தலைச்சுற்றல், வயிற்றுவலி நீங்கும். சகோதர வகையில் பண உதவியுண்டு. அலுவலகத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர்கள். பங்குதாரரின் ஆதரவு கிடைக்கும்

கன்னி: வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். அழகு சாதன பொருட்களை வாங்குவீர்கள். திடீர் பயணங்கள் வரும். குடும்பத்தினருடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வழிபடுவீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.

துலாம்: பிள்ளைகளின் சாதனைகளால் சமூக அந்தஸ்து உயரும். பணவரவு உண்டு. உறவினர்களை பகைத்துக் கொள்ளாதீர். அலுவலகத்தில் உங்களின் நிர்வாகத் திறன் கூடும். மேலதிகாரிகள் பாராட்டுவர். வியாபாரத்தில் பங்குதாரரின் ஆலோசனையை கேட்டு செயல்படவும்.

விருச்சிகம்: மகனின் படிப்பு, மகளின் திருமணம் குறித்த அலைச்சல், டென்ஷன் இருக்கும். தாயாரின் உடல்நிலை சீராகும். அலுவலகத்தில் அதிரடியான முடிவுகளை எடுப்பதாக நினைத்து சிக்கலில் மாட்ட வேண்டாம். வியாபாரத்தில் பணியாட்களிடம் அன்பு காட்டவும்.

தனுசு: பணபலம் உயரும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். பூர்வீக சொத்து சம்பந்தமாக சிலரை சந்திப்பீர். அலுவலகத்தில் உங்களின் ஆளுமை திறனால் எதிலும் வெற்றி பெறுவீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர்.

மகரம்: உறவினர், நண்பர்கள் உங்களை தேடி வருவர். சுபச் செலவுகளால் மனநிம்மதியுண்டு. சொந்த ஊரில் மதிப்பு கூடும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். உடல் சோர்வு நீங்கும். வியாபாரம் சூடு பிடித்து ஏற்றம் காண்பீர்கள். உத்தியோகம் சிறக்கும்.

கும்பம்: தந்தைவழி உறவினர்களால் ஆதாயமுண்டு. பிள்ளைகள் பொறுப்பாக நடப்பர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வியாபாரரீதியான வெளியூர் பயணங்கள் திருப்தி தரும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்களை புரிந்து கொண்டு செயல்படுவர்.

மீனம்: பால்ய நண்பர்கள், உறவினர்களின் சந்திப்பால் உற்சாகம் பெருகும். உடல்நலம் சீராகும். வெளியூர் பயணங்களால் வெற்றியுண்டு. வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்று தீர்ப்பீர்கள். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது நல்லது.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 13 ஜனவரி 2026
ஜோதிட நாள்காட்டி 13.01.2026 | மார்கழி 29 - விசுவாவசு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in