

மேஷம்: தடைபட்டுக் கொண்டிருந்த சுபகாரியங்கள் இனி தடபுடலாக நடக்கும். பால்ய நண்பர்கள் பக்க பலமாக இருப்பார்கள். வியாபாரரீதியாக பிரபலங்களை சந்திப்பீர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நன்மை தரும்.
ரிஷபம்: இழுபறியாக இருந்து வந்த பணிகள் முடியும். தந்தையாரின் உடல்நிலை சீராகும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் சாதகமாகும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவர். நல்ல லாபம் கிட்டும்.
மிதுனம்: நீண்ட நாட்களாக மனதளவில் இருந்துவந்த பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவீர். குழப்பங்கள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியுண்டு. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பணியாட்களின் ஆதரவு கிட்டும். அலுவலக ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்புண்டு.
கடகம்: திட்டமிட்ட பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்படும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களை கவருவீர். ஓரளவு லாபமுண்டு. உத்தியோகம் சிறக்கும்.
சிம்மம்: பால்ய நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். தாய்வழி உறவினர்களால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்கவும். அலுவலகத்தில் மேலதிகாரி ஆதரவு தருவார்.
கன்னி: எதார்த்தமான பேச்சால் தடைபட்ட பணிகளை முடிப்பீர். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு பெருகும். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் வேலையாட்கள் அனுசரனையாக நடந்து கொள்வார்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.
துலாம்: புதுப்புது எண்ணங்கள் தோன்றும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உண்டு. மனைவி, தாயாரின் உடல்நலத்தில் அக்கறை செலுத்தவும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரம் திருப்தி தருவதாக அமையும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
விருச்சிகம்: பொது காரியங்களில் ஈடுபடுவீர். சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உதவிகரமாக செயலபடுவர். அலுவலக ரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரும்.
தனுசு: குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். உறவினர், நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணவரவு உண்டு. பழைய கடன்களை பைசல் செய்வீர். வியாபாரரீதியாக சிலரை சந்திப்பீர். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு உண்டு. சக ஊழியர்கள் மதிப்பர்.
மகரம்: தாய்வழி உறவினர்களால் மனக்கசப்புகள் வந்து போகும். முன்கோபத்தை தவிர்க்கவும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரப் போட்டி இருக்கும். பங்குதாரர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
கும்பம்: பழைய பிரச்சினைகளை சுமுகமாக பேசித் தீர்ப்பீர்கள். வீட்டில் நிம்மதி பிறக்கும். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். அலுவலகத்தில் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரத்தில் அனுபவமிக்க பணியாட்கள் வருவர். புதிய யுக்திகளை கையாள்வீர்.
மீனம்: குடும்பத்தில் நல்லது நடக்கும். பணவரவு உண்டு. குழப்பம் நீங்கி மனதில் தெளிவு பிறக்கும். பேச்சில் உற்சாகம் பிறக்கும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும். இழுபறியாக இருந்த பணிகளை விரைந்து முடிப்பீர். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும்.