மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 10 ஆகஸ்ட் 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 10 ஆகஸ்ட் 2026
Updated on
1 min read

மேஷம்: உங்கள் வித்தியாசமான அணுகுமுறையால் பழைய பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பெரிய பதவியில் இருப்பவர்களின் தொடர்பும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு.

ரிஷபம்: சவாலான காரியங்களையும் சாதுர்யமாக முடித்து வெற்றி பெறுவீர்கள். இடையூறுகள், தடைகள் யாவும் நீங்கும். தைரியமாக செயல்பட்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் போட்டி குறையும். பல வகையிலும் லாபம் அதிகரிக்கும்.

மிதுனம்: பல சவால்களை எதிர்கொள்ள நேரிடும். குடும்பத்தில் யாரிடமும் தேவையற்ற வாக்குவாதங்கள், வீண் பேச்சுகள் வேண்டாம். விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு ஏற்படும். மகான்களின் ஆசி கிடைக்கும்.

கடகம்: நெடுநாட்களாக இழுபறியாக இருந்த காரியம் முடிவுக்கு வரும். பெற்றோர் உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் திருப்திகரமான நிலை உருவாகும். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.

சிம்மம்: மற்றவர்களால் செய்ய முடியாத காரியங்களையும் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடப்பார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் விதமாக வங்கிக் கடனுதவியை நாடுவீர்கள். பண வரவு, பொருள் வரவு உண்டாகும்.

கன்னி: குடும்பத்தினரின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்று வீர்கள். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். மருத்துவச் செலவுகள் குறையும். தாய்வழி சொந்தங்களுடன் இருந்த மனக் கசப்புகள் நீங்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.

துலாம்: விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். நண்பர்கள் உங்கள் உதவியை நாடி வருவார்கள். குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அரசு, வங்கி வகையில் அனுகூலம் உண்டு.

விருச்சிகம்: தவிர்க்க முடியாத செலவுகள், திடீர் வெளியூர் பயணங்கள் வரும். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபத்துக்கு இடம்தராமல் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். மாலைக்குப் பிறகு தேவையற்ற சஞ்சலங்கள் ஓய்ந்து அமைதி திரும்பும்.

தனுசு: காலைப் பொழுது திருப்திகரமாக இருக்கும். பணவரவு உண்டு. பேச்சில் நிதானம் தேவை. குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். வயிற்றுவலி, நெஞ்சு எரிச்சல் வந்து நீங்கும். வியாபாரத்தில் கடும் போட்டிகள் இருந்தாலும் சமாளிப்பீர்கள்.

மகரம்: முகத்தில் தெளிவு பிறகும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சரிசெய்வீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். பரிசுப் பொருட்கள், கலைப் பொருட்கள் சேரும்.

கும்பம்: கைமாற்றாக, கடனாக வாங்கிய பணத்தை ஒருவழியாக தந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை உருவாகும். பால்ய நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். உத்யோகத்தில் உயர் அதிகாரியின் ஆதரவு உண்டு.

மீனம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். தொழிலை மேம்படுத்த புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். காரியத்தில் நிதானம் தேவை.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 10 ஆகஸ்ட் 2026
ஜோதிட நாள்காட்டி 10.08.2026 | ஆடி 25 - திங்கள்கிழமை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in