மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026
Updated on
2 min read

மேஷம்: புது திட்டங்களை தீட்டுவீர். உறவினர், பழைய நண்பர்கள் உங்கள் உதவி நாடி வருவர். தாயாரின் மருத்துவச் செலவுகள் குறையும். வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.

ரிஷபம்: வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். குடும்பத்தில் நிலவிய குழப்பம் நீங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர். பங்குதாரரின் ஆலோசனையை ஏற்பீர். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

மிதுனம்: எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் கூட இழுபறியாகும். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. பூர்வீக வீட்டை சீரமைத்துவிரிவுபடுத்தி கட்ட முயற்சிப்பீர்கள். வியாபாரத்தில் சிக்கல்கள் வரக் கூடும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

கடகம்: பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். பூர்வீகச் சொத்துப்பிரச்சினையை பேசித் தீர்ப்பீர்கள். மூத்த சகோதரர் உதவுவார். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். மேலதிகாரி பாராட்டுவார்.

சிம்மம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். விலையுயர்ந்த அலங்காரப் பொருட்கள் வாங்குவீர்கள். தெய்வீக ஈடுபாடு கூடும். வியாபார போட்டி விலகும். புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர். அலுவலகத்தில் மேலதிகாரி ஆதரவு தருவார்.

கன்னி: இங்கிதமாகப் பேசி சுற்றியிருப்பவர்களை அசத்துவீர். மனைவி, பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். பிரபலங்களால் ஆதாயமுண்டு. வாகனத்தை மாற்றுவீர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

துலாம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர். தந்தைவழியில் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம். பங்குதாரர் ஆதரிப்பார். அலுவலகத்தில் உயரதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து முக்கிய முடிவு எடுப்பர்.

விருச்சிகம்: யாருக்காகவும் எதற்காகவும் உறுதிமொழி தர வேண்டாம். பூர்வீக சொத்து வழக்கில் இருந்த இழுபறி நீடிக்கும். வியாபாரத்தில் பணியாட்களால் தொல்லைகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடுவதை தவிர்க்கவும். சக ஊழியர்கள் மதிப்பார்கள்.

தனுசு: திட்டமிட்ட பணிகளை விரைந்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமையடைவீர். உடன் பிறந்தவர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். அலுவலகத்தில் மேலதிகாரியுடன் இருந்த பனிப்போர் விலகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்.

மகரம்: எதிர்பார்த்தபடி சில பணிகளை முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவீர். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

கும்பம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். மேலதிகாரிகள் பாராட்டுவர்.

மீனம்: சொந்த ஊரிலிருந்து நற்செய்தி வரும். குழப்பம் நீங்கி குடும்பத்தில் அமைதி நிலவும். பூர்வீக வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்டவற்றை விற்பீர். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வியாபாரத்தில் வராது என்றிருந்த பாக்கிகள் வந்து சேரும். அலுவலகத்தில் நிம்மதி கிட்டும்.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கு இந்த வார பலன்கள் @ ஆக.6 - 12

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in