மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026
Updated on
2 min read

மேஷம்: மனநிம்மதியுடன் காணப்படுவீர். குடும்பத்தில் நல்லது ஏற்பாடாகும். பிள்ளைகள் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கொடுப்பர். பூர்வீக வீட்டை விரிவுபடுத்துவீர். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

ரிஷபம்: குடும்பத்தினரிடம் அனுசரித்துப் போகவும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். பூர்வீக வீடு, மனை, விவசாய நிலம் விற்பனையாகும். அலுவலகத்தில் பணிச்சுமை, டென்ஷன் அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரரின் ஆலோசனையை ஏற்கவும்.

மிதுனம்: கடந்த கால சுகமான அனுபவங்களை நினைத்து மனதில் சந்தோஷம் பொங்கும். வாகனத்தை சீர் செய்வீர். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். அலுவலக பணிகளை திறம்பட முடிப்பீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்.

கடகம்: ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புது நண்பர்கள் அறிமுகமாவார்கள். வாகனப் பழுது நீங்கும். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும். வியாபாரம் சிறக்கும்.

சிம்மம்: ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். தாய்வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்து தொடர்பான வழக்கில் சாதகமான தீர்வு கிட்டும். வியாபாரத்தில் போட்டிகளை தகர்ப்பீர். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

கன்னி: பணவரவு திருப்தி தரும். பழைய நண்பர்கள் வீடு தேடி வருவார்கள். குழப்பம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் சாதனைகளால் மதிப்பு உயரும். வியாபாரத்தில் பழைய சரக்கு விற்றுத் தீரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.

துலாம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர். அலுவலகத்தில் மேலதிகாரி நேசக்கரம் நீட்டுவார். வியாபாரத்தில் பங்குதாரர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது நல்லது.

விருச்சிகம்: குடும்பத்தில் பெரியவர்களின் அறிவுரையை ஏற்பது நல்லது. எதிலும் அவசரப்படாமல் நிதானமாக செயல்படவும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் பழைய சரக்குகள் தேங்கும்.

தனுசு: எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வருவதால் மனநிம்மதி கிட்டும். மனைவிவழியில் மதிப்பு உயரும். தாயாரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

மகரம்: வெளிவட்டாரத்தில் பெரிய பதவிக்கு உங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும். மனைவி, தாயாரின் உடல்நிலை திருப்திகரமாக இருக்கும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களை பேசி சமாளிப்பீர்.

கும்பம்: வெளிவட்டாரத்தில் கவுரவப் பதவிகள் தேடி வரும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த கருத்துமோதல் நீங்கும். ஊர் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர். ஷேர் மூலம் பணம் வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டு. அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

மீனம்: பழைய பிரச்சினைகளை பேசித் தீர்ப்பீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கையில் பணம் புரளும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். பணியாட்களின் ஆதரவு உண்டு. அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும்.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026
ஜோதிட நாள்காட்டி 08.08.2026 | ஆடி 23 - சனிக்கிழமை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in