

மேஷம்: பிரபலங்கள் உதவுவர். பயணங்கள் சிறப்பாக அமையும். நேர்கொண்ட பார்வையுடன் சில முடிவுகள் எடுப்பீர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை என்று இருக்க பழகிக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் பணியாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள்.
ரிஷபம்: தள்ளிப் போய்கொண்டிருந்த சுபகாரியங்கள் கை கூடி வரும். பணவரவு உண்டு. வீடு, வாகனத்தை மாற்றுவீர். கூட்டுத்தொழிலில் பங்குதாரர் உதவிகரமாக நடந்து கொள்வார். விவாதங்களை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
மிதுனம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். பணவரவு திருப்தி தரும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். வியாபார ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
கடகம்: வெளிவட்டாரத் தொடர்பு கூடும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர். தேவை பூர்த்தியாகும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள் வியாபாரத்தில் டென்ஷன் விலகும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
சிம்மம்: புது வீடு, மனை, வாகனம் வாங்குவது குறித்து யோசிப்பீர். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் போட்டி விலகும். புதிய பங்குதாரரின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது நல்லது. அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். மதிப்பு உயரும்.
கன்னி: மகனின் படிப்பு, மகளின் திருமணம் தொடர்பாக அலைச்சல், டென்ஷன் இருக்கும். வாகனம் பழுதாகும். மனைவிவழியில் விவாதங்கள் வந்து போகும். எதிலும் அவசரம் காட்ட வேண்டாம். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் பங்குதாரரின் ஆலோசனையை ஏற்கவும்.
துலாம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்பட்டு பணிகளை முடிப்பீர். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சிந்தனைத் திறன் கூடும். மனைவி, தாயாரின் ஆரோக்கியம் சீராகும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்ப்பீர். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.
விருச்சிகம்: புத்திசாலித்தனம் வெளிப்படும். பணவரவு திருப்தி தரும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். வீட்டில் அமைதி நிலவும். ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
தனுசு: குடும்பத்தினரின் விருப்பத்தை கேட்டறிந்து நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். நண்பர்கள் மூலம் உதவியுண்டு. வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களை கவருவீர். உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.
மகரம்: குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்வீர். பிள்ளைகளால் பெருமையடைவீர். பூர்வீக வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்டவற்றை விற்க முயற்சிப்பீர்கள். வியாபாரத்தில் பிரபலங்களின் அறிமுகம் கிட்டும். உத்தியோகம் சிறக்கும்.
கும்பம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர். மனைவிவழி உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். நண்பர் உதவியுடன் புது வேலை கிடைக்கும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். வியாபாரம் லாபம் தரும். பங்குதாரரின் ஆதரவு கிட்டும்
மீனம்: சின்னச் சின்ன விஷயங்களுக்கு வருந்தாதீர்கள். நிதானமாகப் பேசவும். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்துக் கொள்வர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர். வியாபாரத்தில் பங்குதாரரின் கருத்துகளை ஏற்கவும்.