

மேஷம்: பழைய நண்பர்கள் தேடி வருவர். தடைபட்ட அரசாங்க வேலைகள் முடியும். குடும்பத்துடன் சென்று சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். பணவரவு மனநிறைவை தரும். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
ரிஷபம்: வருங்காலத்துக்கான முக்கிய முடிவு எடுப்பீர். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகமாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி கிட்டும். வியாபாரத்தில் சரக்குகளை விற்று லாபம் பார்க்கலாம். அலுவலக ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
மிதுனம்: பணவரவால் பழைய கடனை அடைப்பீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். பூர்வீக வீட்டை சீரமைத்து கட்டுவீர். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். வாகனச் செலவு குறையும். அலுவலகத்தில் விவாதம் வேண்டாம். வியாபாரப் போட்டி குறையும்.
கடகம்: தள்ளிப் போய்க் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிகள் கை கூடி வரும். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். பிள்ளைகளுடன் சுற்றுலா செல்வீர்கள். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பங்குதாரரின் ஆலோசனையை ஏற்பீர்.
சிம்மம்: திட்டமிட்ட பணியை முடிக்க போராடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உடன் பிறந்தவர்கள் ஆதரவுடன் பூர்வீக வீட்டை விற்க முயற்சிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிட்டும்.
கன்னி: பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து வருந்த வேண்டாம். குடும்பத்தில் நல்லது நடக்கும். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர். பிள்ளைகளின் ஆர்வம் படிப்பில் திரும்பும். அலுவலகப் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்ப்பீர்.
துலாம்: குடும்பத்தினரின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். பிள்ளைகள் பொறுப்பு அறிந்து செயல் படுவர். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அலுவலக பணிகளை விரைந்து முடிக்க முயற்சிப்பீர்.
விருச்சிகம்: எதிர்பார்த்த வகையில் பணவரவு உண்டு. உறவினர் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி கிட்டும். உடல்நலம் திருப்தி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். அலுவலகத்தில் உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்.
தனுசு: பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். கூட்டுத்தொழிலில் கடையை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.
மகரம் : குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர். முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவார்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும். வியாபாரரீதியாக மாற்றங்களை செய்வீர்.
கும்பம் : அவசர முடிவுகள் வேண்டாம். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் குழப்பம் வரலாம். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். மேலதிகாரிகள் பாராட்டுவர். வியாபாரத்தில் பங்குதாரரின் கருத்தை நிராகரிக்காதீர்.
மீனம் : விடாப்பிடியாக செயல்பட்டு சில பணிகளை முடிப்பீர். முன்கோபத்தை குறைக்கவும். விரயச் செலவு இருக்கும். தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை தீரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும்.