மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 01 ஆகஸ்ட் 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 01 ஆகஸ்ட் 2026
Updated on
2 min read

மேஷம்: மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தாயாருக்கு இருந்து வந்த அசதி, சோர்வு நீங்கும். பழைய கடனைத் தீர்க்க உதவி கிட்டும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும்.

ரிஷபம்: குற்றம் குறை கூறியவர்கள் இனி வலிய வந்து பேசுவார்கள். வீட்டில் நல்லது நடக்கும். பூர்வீக மனை, விவசாய நிலம் தொடர்பான பிரச்சினை தீரும். அலுவலகத்தில் உயரதிகாரி ஆதரவு தருவார். வியாபார ரீதியாக எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

மிதுனம்: பிள்ளைகளின் விருப்பங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும்.

கடகம்: முன்கோபத்தை தவிர்க்கவும். குடும்பத்தில் குழப்பம் வரும். உறவினர், நண்பர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்துவார்கள். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். மேலதிகாரி ஆதரவு தருவார்.

சிம்மம்: தள்ளிப் போய் கொண்டிருந்த சில பணிகளை முடிப்பீர். உறவினர், பழைய நண்பர்கள் தேடி வருவர். உடன் பிறந்தவர்கள் ஆதரவுடன் பூர்வீக வீட்டை விற்பீர். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. வியாபாரத்தில் புதிய பங்குதாரர், வாடிக்கையாளர்கள் அறிமுகமாவர்.

கன்னி: குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிட்டும். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கி கடன் கிடைக்கும். முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவார்கள். அலுவலகத்தில் உங்களின் ஆலோசனை, கோரிக்கைகள் ஏற்கப்படும்.

துலாம்: எதிர்பாராத பயணங்களால் ஆதாயமுண்டு. அழகு, இளமை கூடும். விஐபிகளின் நட்பு கிடைக்கும். அரசு காரியம் விரைந்து முடியும். தம்பதிக்குள் இருந்த பிரச்சினை விலகும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்.

விருச்சிகம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். ஊர் விசேஷங்களுக்கு தலைமை தாங்குவீர். தொழில் ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் ஆதரவு தருவார்கள்.

தனுசு: குழப்பம் நீங்கி தெளிவான முடிவு எடுப்பீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். பணவரவு திருப்தி தரும். வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்.

மகரம்: விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். நண்பர்கள் உதவுவர். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.

கும்பம்: எளிதான காரியம் கூட இழுபறியில் முடியும். பிள்ளைகளின் நடவடிக்கையை கவனிப்பது அவசியம். அலுவலகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பர். மேலதிகாரி பாராட்டுவார். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது நல்லது.

மீனம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் தங்கும். நெருங்கியவருக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர். வியாபாரத்தில் புது சரக்குகள் வந்திறங்கும். ஓரளவு லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 01 ஆகஸ்ட் 2026
ஜோதிட நாள்காட்டி 01.08.2026 | ஆடி 16 - சனிக்கிழமை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in