மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 31 ஜூலை 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 31 ஜூலை 2026
Updated on
2 min read

மேஷம்: குடும்பத்தில் நிலவி வந்த குழப்பம் விலகும். வேற்றுமதத்தினரின் உதவி கிட்டும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாண்டு பழைய வாடிக்கையாளர்களை கவருவீர். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.

ரிஷபம்: வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். வீட்டில் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரம் திருப்திகரமாக அமையும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும். மேலதிகாரி ஆதரிப்பார்.

மிதுனம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பூர்வீக சொத்து வழக்கின் தீர்ப்பு சாதகமாக அமையும். வியாபாரத்தை விரிவுபடுத்த சில முக்கிய நபர்களை சந்திப்பீர்கள். அலுவலகரீதியான பிரச்சினைகள் ஓயும்.

கடகம்: பணத்தை கவனமாக கையாளவும். உடன் பிறந்தவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பிள்ளைகளின் உடல்நலம் பாதிக்கும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். அடுத்தவர் விஷயத்தில் தலையிட வேண்டாம்.

சிம்மம்: பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளும் அளவுக்கு நெருக்கமாவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழிலில் எதிராக செயல்பட்ட பணியாட்களை மாற்றுவீர். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர். விவாதங்களை தவிர்க்கவும்.

கன்னி: பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கான மாற்று வழியை கண்டறிவீர். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். முகப்பொலிவு, ஆரோக்கியம் கூடும். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு உண்டு. வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களின் ஆலோசனையை நிராகரிக்காதீர்.

துலாம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர். தாயாரின் உடல்நிலை சீராகும். உறவினர், நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பிள்ளைகளால் பெருமையுண்டு. அலுவலகத்தில் அமைதி காக்கவும். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர்.

விருச்சிகம்: ஈகோ பிரச்சினை, கருத்து வேறுபாடு தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வெளிப்படையான பேச்சால் சில காரியங்களை முடித்து காட்டுவீர். எதிலும் மகிழ்ச்சி கிட்டும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

தனுசு: மனதுக்கு இதமான செய்தி வரும். உடல்சோர்வு, வயிற்றுவலி சீராகும். பூர்வீக வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய முயற்சிப்பீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் ஆதரவாக இருப்பர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

மகரம்: முன்கோபத்தை தவிர்க்கவும். மகனின் வேலை, மகளின் திருமணம் என்று அலைச்சல் வந்துபோகும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். பூர்வீக வீட்டை விற்பனை செய்வீர். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

கும்பம்: வெளிவட்டாத்தில் மதிப்பு, மரியாதை உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உறவினர், நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். ஊர் விசேஷங்களுக்கு தலைமை தாங்குவீர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர்.

மீனம்: புது வகை எலக்ட்ரானிக்ஸ் சாதனம் வாங்குவீர். மனைவி வழியில் பண உதவி கிட்டும். வாகனப் பழுது நீங்கும். யாருக்கும் எந்த வகையிலும் உறுதிமொழி தர வேண்டாம். வியாபாரரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் யாரையும் குறை கூறாதீர்.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 31 ஜூலை 2026
ஜோதிட நாள்காட்டி 31.07.2026 | ஆடி 15 - வெள்ளிக்கிழமை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in