

மேஷம்: ஆடம்பர செலவுகளை தவிர்ப்பீர். பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த ஆலோசனை செய்வீர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது நல்லது. வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.
ரிஷபம்: மனதில் இருந்த பயம் நீங்கி, துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர். தம்பதிக்குள் அனுசரித்து போவீர். பிள்ளைகளால் பெருமையுண்டு. அலுவலகத்தில் சக ஊழியர் மத்தியில் மதிப்புயரும். வியாபாரத்தில் லாபம் கிட்டும். பங்குதாரர்களை அரவணைத்துச் செல்லவும்.
மிதுனம்: குழப்பங்கள் நீங்கும். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர். உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். தந்தைவழி சொத்துகள்கைக்கு வரும். மூத்த சகோதரர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
கடகம்: பணப் பற்றாக்குறை நீங்கி சேமிப்பு கூடும். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். அலுவலகத்தில் மனநிறைவுடன் சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர்.
சிம்மம்: அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தந்தைவழியில் ஆதாயம் உண்டு. உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் லாபமுண்டு. அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.
கன்னி: ஒருவித படபடப்பு வரும். தம்பதிக்குள் ஈகோ பிரச்சினை வரக்கூடும். மனம் விட்டு பேசுவது நல்லது. அக்கம் பக்கத்தினரின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் போராடி பாக்கிகளை வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடுவதை தவிர்க்கவும்.
துலாம்: குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். பணவரவு உண்டு. குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். தந்தையின் உடல்நிலை சீராகும். அண்டை வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். பூர்வீக சொத்து வழக்கில் வெற்றி கிட்டும். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.
விருச்சிகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகளால் வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். வாகனப்பழுது நீங்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய கொள்முதல் செய்வீர்கள். அலுவலகத்தில் அனைவரையும் அனுசரித்து செல்லவும்.
தனுசு: வெளிவட்டாத்தில் மதிப்பு கூடும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வீட்டிலுள்ள பழைய பொருட்களை மாற்றுவீர். குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
மகரம்: குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு பிறக்கும். குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.
கும்பம்: பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலையுயர்ந்த ஆபரணம் வாங்குவீர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் சக ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும்.
மீனம்: அதிரடியான முடிவுகளை எடுக்காதீர்கள். திடீர் பயணங்கள், ஆழ்ந்த உறக்கமின்மை வந்துச் செல்லும். உடன்பிறந்தவர்களால் சங்கடங்கள் வர வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர். வியாபாரத்தில் கடையை மக்கள் கூடும் இடத்துக்கு மாற்றுவீர்.