

மேஷம்: சந்தர்ப்பங்களையும் சரியாகப் பயன்படுத்தி, காரியம் சாதிப்பீர்கள். பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள். நீங்கள் எதிர்பார்த்திருக்கும் நல்ல செய்தி வெளியூரில் இருந்து வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
ரிஷபம்: நம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வீண், ஆடம்பரச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். பொருட்கள் சேரும். உங்கள் சேமிப்பு மேலும் அதிகரிக்கும்.
மிதுனம்: எதையும் தாங்கும் மனவலிமை கிடைக்கும். பண வரவு, பொருள் வரவு உண்டு. எதிர்ப்புகள், ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். சகோதர உறவுகள் பக்கபலமாக இருப்பார்கள். தக்க சமயத்தில் உதவுவார்கள். பணம், நகை, முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளுங்கள்.
கடகம்: தைரியமாக செயல்பட்டு சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சகோதர உறவுகள் பக்கபலமாக இருப்பார்கள். நிலம், வீடு வாங்குவது, விற்பது சாதகமாக முடியும். நாடி வந்தவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்வீர்கள்.
சிம்மம்: பழைய சம்பவங்களை நினைத்துப்பார்த்து மகிழ்வீர்கள். வழக்குகளில் நல்ல திருப்பம் உண்டாகும். அரசு, வங்கி வகையில் அனுகூலம் உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும். சொத்து விஷயத்தில் இருந்த சிக்கல்கள் தீரும்.
கன்னி: கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி தங்கும். சகோதர உறவுகள் ஆதரவாக இருப்பார்கள். முக்கிய பதவிகள், பெரிய பொறுப்புகள் தேடி வரும். நண்பர்கள், உறவினர்கள் வருகையால் வீடு களைகட்டும்.
துலாம்: தேவையற்ற அச்சம், கவலை, குழப்பங்கள் வந்துபோகும். பேச்சில் நிதானம் தேவை. நீண்டதூரப் பயணங்களை தவிர்க்கவும். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது. புதிய வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். உத்யோகத்தில் உயர் அதிகாரிகளிடம் நற்பெயர், பாராட்டு பெறுவீர்கள்.
விருச்சிகம்: தைரியமாக செயல்பட்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். நண்பர்கள் உதவுவார்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
தனுசு: அடுத்தடுத்து இடையூறுகள், பிரச்சினைகள் வந்தாலும், தைரியத்துடன் சமாளிப்பீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். மனதில் புதிய தெம்பு, நம்பிக்கை பிறக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு. பிள்ளைகள் பொறுப்பை உணர்ந்து நடப்பார்கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள்.
மகரம்: உங்களிடம் இருக்கும் சோர்வு, களைப்பு நீங்கும். உற்சாகத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி, அன்யோன்யம் அதிகரிக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். பெற்றோர் உடல்நலம் சீராகும்.
கும்பம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். உங்களைவிட்டு விலகிச் சென்றவர்கள் தேடிவந்து பேசுவார்கள்.
மீனம்: வெளி வட்டாரத்தில் யாரிடமும் வீண் பேச்சுகள் வேண்டாம். புதிய நபர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். வியாபாரத்தில் நிதானம் தேவை. குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். எதிலும் பொறுமை தேவை.