மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 27 ஜூலை 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 27 ஜூலை 2026
Updated on
1 min read

மேஷம்: எதிர்பார்த்திருக்கும் நல்ல செய்தி வெளியூர், வெளிநாட்டில் இருந்து வரும். குடும்பத்தினரின் ஆசைகள், விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். அடிக்கடி பழுதாகும் வாகனத்துக்கு செலவு செய்யாமல் புதிய வாகனம் வாங்குவீர்கள்.

ரிஷபம்: தலைவலி, சோர்வு வந்து நீங்கும். நண்பகல் முதல் தடைகள், இடையூறுகள் விலகும். வியாபாரத்தில் லாபம் உண்டு. நாடி வந்தவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்வீர்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் ஈடுபாடு ஏற்படும்.

மிதுனம்: குடும்பத்தினருடன் கலந்துபேசி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகளிடம் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். சுபச் செலவுகள் வரக்கூடும். தொழில், வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.

கடகம்: சிக்கனமாக இருக்க நினைத்தாலும், அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். சொந்த பந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டாகும். வாகனத்தில் இருந்த பழுது நீங்கும். கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும். புதியவர்களால் ஆதாயம் உண்டு.

சிம்மம்: புதிய மின்னணு, மின்சார சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு, மகிழ்ச்சி, அமைதி திரும்பும். வெகு காலமாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார்.

கன்னி: விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். தங்கம், வெள்ளி ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

துலாம்: எதிர்பாராத பண வரவால் பழைய கடனை பைசல் செய்வீர்கள். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் வேலைச் சுமை குறையும். அரசு, வங்கி வகையில் ஆதாயம் உண்டு.

விருச்சிகம்: கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். சகோதர வகையில் இருந்த அலைச்சல் விலகும். பெரிய நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் வேலை அமையும். தொழில், வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

தனுசு: கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபத்துக்கு இடம்தராமல் மனம்விட்டுப் பேசுவீர்கள். திடீர் பயணங்களால் அலைச்சல், அசதி ஏற்படும். வீண், ஆடம்பரச் செலவுகளைக் கட்டுப்படுத்தி, சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும்.

மகரம்: புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். அரசு, வங்கி சம்பந்தமான வேலைகள் முடிவுக்கு வரும். எதிலும் பொறுமை தேவை.

கும்பம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று நடப்பார்கள். பழுதான வாகனத்தை சரிசெய்வீர்கள். பிள்ளைகளிடம் இருந்த பிடிவாதப் போக்கு மறையும். வியாபாரத்தில் போட்டி குறையும். தடைகளைப் பொருட்படுத்தாமல் முன்னேறுவீர்கள்.

மீனம்: வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வங்கியில் கேட்ட கடனுதவி கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வீர்கள். வெளியூர் பயணம் மகிழ்ச்சி தரும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 27 ஜூலை 2026
ஜோதிட நாள்காட்டி 27.07.2026 | ஆடி 11 - திங்கள்கிழமை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in