

மேஷம்: விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம். பங்குதாரர் ஆதரிப்பார்.
ரிஷபம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். பூர்வீக சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
மிதுனம்: கூடுதலான பணவரவால் வீட்டிலுள்ள பழைய பொருட்களை மாற்றுவீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் உயரதிகாரி பாராட்டும் விதமாக நடப்பீர்கள். சக ஊழியர்கள் மதிப்பார்கள்.
கடகம்: குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் விலகும். பணவரவு திருப்திகரமாக அமையும். யாருக்கும் எந்த வகையிலும் உறுதிமொழி தராதீர். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் செல்வாக்கு உயரும். மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.
சிம்மம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வர். உடன் பிறந்தவர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் ஓரளவு லாபமுண்டு. குழப்பங்கள் தீர்ந்து அலுவலகத்தில் மகிழ்ச்சி உண்டு. மதிப்பு உயரும்.
கன்னி: கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வயிற்றுவலி, மூக்கடைப்பு நீங்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
துலாம்: முக மலர்ச்சியுடன் காணப்படுவீர். குடும்ப உறுப்பினர்களிடம் விவாதங்களை தவிர்ப்பீர். ஆடை, ஆபரணம் சேரும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு உண்டு. வியாபாரத்தில் பங்குதாரரின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பீர். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.
விருச்சிகம்: தம்பதிக்குள் சின்ன சின்ன கருத்து மோதல் வரக்கூடும். பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டவும். வியாபாரத்தில் பாக்கிகளை வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும். மேலதிகாரி பாராட்டுவார்.
தனுசு: பழைய வழக்குகளை இப்போது பேசித் தீர்ப்பீர். பணவரவால் மனநிம்மதி உண்டு. வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்த முற்படுவீர்கள். பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர். அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.
மகரம்: பழைய நண்பர்கள் தேடி வருவர். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் லாபமுண்டு. அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. நீண்ட நாளாக தேடிய ஆவணம் தென்படும்.
கும்பம்: இழுபறியாக இருந்த பணிகள் இன்று முடியும். தந்தையாருடன் இருந்த கருத்து வேறுபாடு விலகும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் புதிய பதவிக கு பரிந்துரை செய்யப்படுவீர். மதிப்பு, மரியாதை உயரும்.
மீனம்: தள்ளிப் போய் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிக்கு நாள் குறிப்பீர். பணவரவு திருப்தி தரும். முன்கோபத்தை தவிர்ப்பீர். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களை கவருவீர். பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள்.