

மேஷம்: பூர்வீக சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. திட்டமிட்ட பணியை முடிக்க போராடுவீர்கள். வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபமுண்டு. அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நல்லது.
ரிஷபம்: அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் சாதகமாகும். தந்தை யாரின் உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் இழுபறியாக இருந்த பணிகள் முடியும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள்.
மிதுனம்: எதிர்மறை எண்ணம் நீங்கும். பிரபலங்கள் வீட்டு விசேஷங் களில் கலந்து கொள்வீர். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். புது வாடிக்கையாளர்கள் வருகை தருவர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடுவதை தவிர்க்கவும்.
கடகம்: மனதில் தைரியம் பிறக்கும். வருங்காலம் பற்றிய பயம் விலகும். பணவரவு திருப்தி தரும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும்.வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிட்டும்.
சிம்மம்: குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிட்டும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. அவர்கள் விரும்பிய பொருட்களை வாங்குவீர். வியாபாரத்தில் பணியாட்கள் ஒத்துழைப்பு தருவார்கள். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும்.
கன்னி: பிரச்சினைகளை சமாளிக்கும் சக்தி கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். பூர்வீக சொத்து தொடர்பான வழக்கில் தீர்வு கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரி உதவிகரமாக இருப்பார். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள்.
துலாம்: கைமாற்றாக கேட்டிருந்த பணம் கிடைக்கும். சொத்துப் பிரச்சினைகள் தீரும். பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் குடும்பத்துடன் பங்கேற்பீர். உங்களால் ஆதாயமடைந்தவர்கள் உங்களை சந்திக்க வருவார்கள். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
விருச்சிகம்: திட்டமிட்ட பணிகளை முடிக்க முடியாமல் தடுமாறுவீர். கையிருப்பு கரையக் கூடும். வாகனத்தில் கவனம் தேவை. யாருக்கும் எதற்காகவும் உறுதிமொழி அளிக்க வேண்டாம். வியாபாரத்தில் போட்டி இருக்கும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.
தனுசு: சவாலான காரியங்களை எளிதாகச் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பிள்ளைகள் பொறுப்பு அறிந்து செயல்படுவார்கள். அலுவலகத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வெல்வீர்.
மகரம்: பிள்ளைகளிடம் குவிந்து கிடக்கும் திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்.
கும்பம்: குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு ஆதரவு கூடும். தந்தைவழி உறவினர்கள் தேடி வருவர். மறைமுகமாக செயல்பட்டவர்களை ஒதுக்கு வீர். அலுவலகத்தில் சக ஊழியர்களின் அன்பு கிட்டும். மேலதிகாரி பாராட்டுவார். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
மீனம்: குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வர். அலுவலகத்தில் அடுத்தவரைப் பற்றி குறை கூறுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். புதிய பங்குதாரர்களின் கருத்துகளை ஏற்பது நல்லது.