மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 13 ஜூலை 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 13 ஜூலை 2026
Updated on
1 min read

மேஷம்: தடைகளைப் பொருட்படுத்​தாமல், உங்​கள் இலக்கை நோக்கி முன்​னேறு​வீர்​கள். பல வகை​யிலும் சேமிப்பு அதி​கரிக்​கும். சகோ​தர, சகோ​தரி​களின் ஆதரவு உண்​டு. வியா​பாரத்​தில் பழைய பாக்​கி​கள் வசூலாகும். வீடு, வாக​னப் பழுதை சரிசெய்​வீர்​கள்.

ரிஷபம்: வெளி வட்​டாரத் தொடர்​பு​கள் அதி​கரிக்​கும். வியா​பாரத்​தில் பாக்​கி​கள் வசூலாகும். மனைவி வழி உறவினர்​களால் ஆதா​யம் கிடைக்​கும். தொண்​டைப் புகைச்​சல், வயிற்று வலி வில​கும். பண வரவு உண்​டாகும். ஆன்​மிகத்​தில் நாட்​டம் ஏற்​படும்.

மிதுனம்: வீண் அலைச்​சல், டென்​ஷன் வரக்​கூடும். குடும்​பத்​தில் விட்டுக்​கொடுத்​துச் செல்​வது அவசி​யம். வியா​பாரத்​தில் போட்​டிகள் இருந்​தா​லும் தைரிய​மாக சமாளிப்​பீர்​கள். வாக​னப் பயணத்​தில் கவனம் தேவை. யாரை​யும் எடுத்​தெறிந்து பேசக் கூடாது.

கடகம்: உறவினர்​கள், நண்​பர்​கள் வரு​கை​யால் வீடு களை​கட்​டும். பிள்​ளை​களின் விருப்​பங்​களை அறிந்து நிறைவேற்​று​வீர்கள். உடல்​நலம் சீராகும். மருத்​து​வச் செல​வு​கள் குறை​யும். குடும்​பத்​தினர் ஆதர​வாக இருப்​பார்​கள். கலைப் பொருட்​கள் சேரும்.

சிம்​மம்: புதிய நபர்​களால் ஆதா​யம் உண்​டாகும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்​வீர்​கள். தேவையற்ற மனக் குழப்​பங்​கள் நீங்​கி, தெளிவு பிறக்​கும். உடல்​நலத்​தில் அக்​கறை காட்​டு​வீர்​கள். தொழில், வியா​பாரத்தை விரிவுபடுத்​து​வீர்​கள்.

கன்னி: வில​கிச் சென்ற உறவினர்​கள், நண்​பர்​கள் விரும்பி வந்து உறவாடு​வார்​கள். குடும்​பத்​தில் கலகலப்​பான சூழல் உரு​வாகும். அரசு, வங்கி வகை​யில் அனுகூலம் உண்​டு. வியா​பாரத்தை விரிவுபடுத்​து​வீர்​கள். அலு​வலக ரீதி​யாக முக்​கிய முடிவு​கள் எடுப்​பீர்​கள்.

துலாம்: தொழில், வியா​பாரத்​தில் போட்​டிகள் மறை​யும். கணவன் - மனை​விக்​குள் மனஸ்​தாபம் நீங்கி அன்​யோன்​யம் அதி​கரிக்​கும். எதிர்​பார்த்த இடத்​தில் இருந்து நல்ல செய்தி வரும். புதி​ய​வர்​களு​டன் நட்பு மலரும். தலை​வலி, காய்ச்​சல் நீங்​கும்.

விருச்​சிகம்: முன்​கோபம் அதி​கரிக்​கும். பிள்​ளை​களால் அலைச்​சல் உண்​டு. வியா​பாரத்​தில் பழைய பாக்​கி​கள் வசூலாகும். வாயுக் கோளாறு, சளித் தொந்​தரவு வந்து நீங்​கும். அலு​வல​கப் பணி​களில் அதிக கவனம் தேவை. நாடி வந்​தவர்​களுக்கு உதவுவீர்​கள்.

தனுசு: குடும்​பத்​தில் நீண்ட நாட்​களுக்​குப் பிறகு அமை​தி​யும், மகிழ்ச்​சி​யும் திரும்​பும். எல்​லா​வற்​றுக்​கும் அடுத்​தவர்​களைக் குறை​கூறாதீர்​கள். அக்​கம் பக்​கம் இருப்​பவர்​களை அனுசரித்​துச் செல்​வது அவசி​யம். பயணத்​தின்​போது அதிக கவனம் தேவை.

மகரம்: வீண் குழப்​பங்​கள் நீங்கி தெளிவு பிறக்​கும். பிள்​ளை​களின் பிடி​வாதம் குறை​யும். உடல்​நலம் நிம்​மதி தரும். வருங்​காலத்​துக்​காக சேமிப்​பீர்​கள். மனதுக்​குப் பிடித்​தவர்​களை சந்​தித்து மகிழ்​வீர்​கள். ஆன்​மிகம், தியானத்​தில் ஈடு​பாடு ஏற்​படும்.

கும்​பம்: மனக் குழப்​பங்​கள் வில​கும். வெளியூர் பயணங்​கள் திருப்தி தரும். கணவன் - மனை​விக்​குள் அன்​யோன்​யம் அதி​கரிக்​கும். பணவரவு கூடும். உத்​தி​யோகத்​தில் உயர் அதி​காரி​யின் ஆதரவு கிடைக்​கும். எக்​காரி​யத்​தி​லும் நிதானம் அவசி​யம்.

மீனம்: கணவன் - மனைவிக்​குள் மனம்​விட்​டுப் பேசுவீர்​கள். நீண்ட​நாள் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்​பீர்​கள். குழப்​பங்​கள் வில​கும். திடீர் பணவரவு உண்​டு. விலை உயர்ந்​த பொருட்​கள்​ வாங்​கு​வீர்​கள்​. ஆடை, ஆபரணங்​கள்​ சேரும்​.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 13 ஜூலை 2026
ஜோதிட நாள்காட்டி 13.07.2026 | ஆனி 29 - திங்கள்கிழமை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in