மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 10 ஜூலை 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 10 ஜூலை 2026
Updated on
2 min read

மேஷம்: பழைய பிரச்சினைகள் தலை தூக்கும். மனதில் கவலை வரும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். மின் சாதனங்களை கவனமாக கையாளவும். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள்.

ரிஷபம்: செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களிடம் சிலர் உதவி கேட்பர். ஆன்மிகவாதிகளை சந்திப்பீர்கள். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

மிதுனம்: மனதில் இருந்த பயம் விலகும். துணிச்சலுடன் சில முடிவுகளை எடுப்பீர். அலைச்சல் தந்த பணிகளை உடனே முடிப்பீர்கள். தம்பதிக்குள் அனுசரித்து போவது நல்லது. அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கவும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்.

கடகம்: திட்டமிட்ட பணிகளை முடிக்க போராட வேண்டியிருக்கும். பணவரவு உண்டு. உறவினர், பழைய நண்பர்கள் உங்களிடம் உதவி கேட்பார்கள். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் பங்குதாரரின் ஆதரவு கிட்டும். உத்தியோகம் சிறக்கும்.

சிம்மம்: பணப் பற்றாகுறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர். மனநிறை வுடன் சில வேலைகளை செய்து முடிப்பீர். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

கன்னி: உற்சாகமான, தன்னம்பிக்கையான பேச்சால் அனைவரையும் கவருவீர். குழப்பங்கள் நீங்கி தந்தை வழி சொத்து கைக்கு வரும். உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.

துலாம்: நீங்கள் நல்லது சொல்லப் போய் சிலர் தவறாகப் புரிந்து கொள்வர். உடல்நலத்தில் கவனம் செலுத்தவும். கூடுதல் செலவு இருக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும். மேலதிகாரிகள் பாராட்டுவர்.

விருச்சிகம்: துணிச்சலான முடிவுகளை எடுப்பீர். தம்பதிக்குள் அனுசரித்து போவீர். பிள்ளைகளால் பெருமையுண்டு. வியாபாரத்தில் லாபம் கிட்டும். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் அன்பாக இருக்கவும். அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்கள்.

தனுசு: குறிக்கோளை எட்டிப் பிடிக்க முயற்சிப்பீர்கள். பணவரவு உண்டு. குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். தந்தையின் உடல்நிலை சீராகும். அண்டை வீட்டாரின் ஆதரவு கிட்டும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்.

மகரம்: வீட்டில் பழைய பொருட்களை மாற்றுவீர். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். குடும்பத்தினரிடம் மனம் விட்டுப் பேசுவீர். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் அமைதி காக்கவும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெல்வீர்.

கும்பம்: அதிரடி திட்டங்களை தீட்டி வெற்றி பெறுவீர். பணவரவு திருப்தி தரும். தந்தைவழியில் ஆதாயமுண்டு. விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர். புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.

மீனம்: குழப்பம் நீங்கி மனதில் தெளிவு பிறக்கும். செலவுகள் குறையும். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். உத்தியோகம் சிறக்கும்.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 10 ஜூலை 2026
ஜோதிட நாள்காட்டி 10.07.2026 | ஆனி 26 - வெள்ளிக்கிழமை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in