

மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெரியோரின் ஆசி கிடைக்கும். பிள்ளைகளால் மனநிம்மதி கிட்டும். கல்யாண முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
ரிஷபம்: சுபச்செலவுகள் வரும். வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். நல்ல இடவசதியுடன் கூடிய வீட்டுக்கு குடிபுகுவீர். பழைய வழக்குகளில் வெற்றி காண்பீர். அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாள்வீர்.
மிதுனம்: பிள்ளைகளின் சாதனைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். புது திட்டங்கள் தீட்டுவீர். தியானம், யோகா, ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். வியாபாரத்தில் போட்டிகள் விலகும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
கடகம்: ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். உடன்பிறந்தவர்களின் ஆதரவுடன் பூர்வீக வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரரீதியாக பிரபலங்களை சந்திப்பீர்கள். விவாதங்களில் தலையிடாமலிருப்பது நன்மை தரும்.
சிம்மம்: பூர்வீக சொத்துப் பிரச்சினைகளை பேசித் தீர்க்க வழி பிறக்கும். பணவரவு திருப்தி தருவதாக அமையும். குடும்ப உறுப்பினர் களுடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர். கூட்டுத்தொழிலில் லாபம் உண்டு. அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
கன்னி: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். மகனுக்கு புது வேலையும் அமையும். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரரீதியாக வெளியூர் பயணங்கள் செல்வீர்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.
துலாம்: தாய்வழி உறவினர்களால் ஆதாயமுண்டு. குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டியிருக்கும். பழைய கடன் பைசலாகும். வியாபாரத்தில் போட்டி உடைபடும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும்.
விருச்சிகம்: பிள்ளைகள் அன்பாக நடந்து கொள்வர். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். வியாபாரத்தை விரிவுபடுத்த சிலரின் உதவியை நாடுவீர். அலுவலக ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு.
தனுசு: தம்பதிக்குள் இருந்த கருத்துமோதல் விலகி, ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வீர். வராது என்றிருந்த பணம் வரும். நீண்டநாள் பேசாமல் இருந்த உறவினர்கள் வலிய வந்துப் பேசுவர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும்.
மகரம்: திடீர் செலவு, மன உளைச்சல் வந்து போகும். எதிலும் அவசரப்படாமல் நிதானமாக செயல்படவும். வியாபாரத்தில் வேலையாட்களால் தொந்தரவு வரும். வாடிக்கையாளர்களிடம் கனிவாக பேசவும். அலுவலக ரீதியான பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும்.
கும்பம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தந்தையின் உடல்நலம் சீராகும். பால்ய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் புதிய பொறுப்பால் மகிழ்ச்சி அடைவீர். மேலதிகாரிகள் பாராட்டுவர்.
மீனம்: மறைமுக எதிர்ப்புகளை வெல்வீர். தம்பதிக்குள் நிலவி வந்த பனிப்போர் மறையும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவீர். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர். வியாபாரம் சூடு பிடித்து லாபம் காண்பீர்.