

மேஷம்: பணப் பற்றாக்குறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர். தாயின் உடல்நலம் சீராகும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். உத்தியோகம் சிறக்கும்.
ரிஷபம்: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். அலுவலகத்தில் பணிச்சுமை ஓரளவு குறையும். வியாபாரத்தில் பங்குதாரரின் ஆலோசனையை ஏற்கவும்.
மிதுனம்: சில காரியங்களை போராடி முடிப்பீர். உடன் பிறந்தவர்களை அனுசரித்து நடக்கவும். பிள்ளைகளிடம் அநாவசியமாக கோபப்படாதீர். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நல்லது.
கடகம்: வெளியூரிலிருந்து உறவினர், நண்பர்கள் வருகை தருவர். பணவரவால் சேமிப்பு அதிகரிக்கும். பழைய சிக்கல்கள் விலகும். குடும்ப உறுப்பினர்களுடன் சென்று குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
சிம்மம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில பணிகளை செய்து முடிப்பீர்கள். வாகனத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் அமைதி காப்பீர்.
கன்னி: நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர். அக்கம் - பக்கத்தினரின் ஆதரவு பெருகும். குடும்பத்தின் அடிப்படை வசதியை மேம்படுத்துவீர். நவீன மின்னணு சாதனம் வாங்குவீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
துலாம்: தாய்வழி உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். இல்லத்தில் சுபநிகழ்ச்சி ஏற்பாடாகும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். அலுவலகத்தில் அமைதி காக்கவும். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள்.
விருச்சிகம்: புதிய கோணத்தில் சிந்தித்து செயல்படுவீர். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். குடும்பத்தினரால் மனநிம்மதி கிட்டும். அரசு அதிகாரிகளின் அறிமுகத்தால் சில பணிகளை முடிப்பீர். அலுவலகத்தில் விவாதம் தவிர்ப்பீர். வியாபாரத்தில் புதிய பங்குதாரர் கிடைப்பார்.
தனுசு: குழப்பம் நீங்கி குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். வெளியூரிலிருந்து உறவினர், நண்பர்கள் வருவார்கள். உடல் ஆரோக்கியம் சீராகும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும்.
மகரம்: முன்கோபத்தை தவிர்க்கவும். மகனின் வேலை, மகளின் திருமணம் தொடர்பாக அலைச்சல் இருக்கும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை வசூலிப்பீர். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். மேலதிகாரிகள் ஆதரவு தருவர்.
கும்பம்: குழப்பம் நீங்கி தெளிவு பெறுவீர். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்கள். மேலதிகாரிகள் ஆதரவு தருவர்.
மீனம்: முன்கோபத்தை தவிர்த்து அறிவுப்பூர்வமாக யோசித்து செயல்படுவீர். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். உடல்நலம் சீராகும். தந்தைவழியில் அனுகூலமுண்டு. வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.