மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 01 ஜூலை 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 01 ஜூலை 2026
Updated on
2 min read

மேஷம்: எதிலும் வெற்றி பெறுவீர். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பயணங்கள் திருப்தி தரும். அலுவலகத்தில் அமைதி காக்கவும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்.

ரிஷபம்: எதிர்பார்த்து காத்திருந்த உதவிகள் கிடைக்கும். திட்டமிட்ட காரியம் கைகூடும். குடும்பத்தில் அமைதி நிலவும். உடல் அசதி விலகும். பணவரவு திருப்தி தரும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

மிதுனம்: வெளுத்ததெல்லாம் பாலாக நினைக்காதீர்கள். பிள்ளைகளிடம் முன்கோபத்தை காட்டாதீர். அவர்கள் விருப்பத்தை கேட்டறிந்து பூர்த்தி செய்யவும். பிறரிடம் கைமாற்றாக பணம் வாங்க வேண்டி வரும். அலுவலக ரீதியாக பயணம் செல்வீர். வியாபாரம் லாபம் தரும்.

கடகம்: சிக்கலான, சவாலான காரியங்களை கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். வாகனப் பழுதை சீர் செய்வீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய மிகவும் கடினமாக உழைக்க வேண்டும்.

சிம்மம்: முகப்பொலிவு கூடும். அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். சோர்வு நீங்கும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமையடைவீர்கள். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

கன்னி: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள். கருத்து மோதல் நீங்கி தம்பதிக்குள் நெருக்கம் கூடும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு உண்டு. அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றுவீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்.

துலாம்: புதிய எலட்ரானிக்ஸ், கலை பொருட்கள் வீடு வந்து சேரும். பழைய நண்பர்களால் ஆதாயம் உண்டு. மனக்குழப்பம் நீங்கும். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போகவும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கவும்.

விருச்சிகம்: நெடுநாளாக திட்டமிட்டுக் கொண்டிருந்த காரியங்களை செயல்படுத்திக் காட்டுவீர். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். அலுவலகத்தில் உயரதிகாரியின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்.

தனுசு: தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை தீர்ந்து, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வீர்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரியின் தொந்தரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை வசூலிக்க போராடுவீர்கள்.

மகரம்: தைரியமான முடிவுகள் எடுத்து வெல்வீர்கள். உறவினர், நண்பர்களை சந்திப்பீர். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் ஓரளவு லாபமுண்டு. பழைய பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நன்மை தரும்.

கும்பம்: எதிர்காலம் பற்றிய பயம், கவலை விலகும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தவும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்.

மீனம்: குழப்பம் நீங்கி மனதில் தெளிவு பிறக்கும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். பணவரவு கூடும். அலுவலகத்தில் அடுத்தவரைப் பற்றி குறை கூறாதீர். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும்.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 01 ஜூலை 2026
ஜோதிட நாள்காட்டி 01.07.2026 | ஆனி 17 - புதன்கிழமை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in