

மேஷம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில பணிகளை முடிப்பீர். பணப் பற்றாக்குறை நீங்கும். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அலுவலகரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். சக ஊழியர்கள் மதிப்பர்.
ரிஷபம்: ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் ஓடி வந்து பேசுவர். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போகவும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
மிதுனம்: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர் யார் என்பதை கண்டறிவீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெல்வீர்.
கடகம்: வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். பூர்வீக வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும். வியாபாரத்தில் இருந்த அலைச்சல் நீங்கும்.
சிம்மம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சினை களுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு. பங்குதாரர்களின் ஆதரவு கிட்டும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
கன்னி: வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். மனைவியுடன் மனஸ்தாபங்கள் வரும். முன்கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர். சக ஊழியர்கள் மதிப்பார்கள்.
துலாம்: சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள். தம்பதிக்குள் பரஸ்பரம் புரிந்து கொள்வீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பங்குதாரரின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது நல்லது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
விருச்சிகம்: பணவரவால் அவசரத்துக்கு கைமாற்றாக வாங்கி யிருந்த தொகையை தந்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர் மத்தியில் மதிப்பு கூடும். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து நடந்து கொள்வீர். வியாபாரம் விறுவிறுப்பாக அமையும். பாக்கிகள் வசூலாகும்.
தனுசு: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிட்டும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் உண்டு. வியாபாரத்தில் சலுகைகளை அளித்து வாடிக்கையாளர்களை கவருவீர். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
மகரம்: குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கூடும். சேமிக்கும் எண்ணம் மனதில் தோன்றும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வியாபாரத்தில் வேற்றுமொழி வாடிக்கையாளர்கள் வருவர். அலுவல கத்தில் தேடிய ஆவணம் தென்படும். மேலதிகாரிகள் பாராட்டுவர்.
கும்பம்: அரசுக் காரியங்களில் இருந்து வந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். குழப்பம் நீங்கி அலுவலகத்தில் நிம்மதியுண்டு. பயணம் மகிழ்ச்சி தரும்.
மீனம்: பணவரவு திருப்தி தரும். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் போட்டிகளை எளிதில் சமாளிப்பீர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிட வேண்டாம்.