

மேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க எண்ணுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரி நேசக்கரம் நீட்டுவார். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். நல்ல லாபம் பார்ப்பீர்.
ரிஷபம்: குடும்பத்தில் அமைதி திரும்பும். வெளிநாட்டு பயணத்துக் கான விசா கிடைக்கும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களின் ஆலோசனைகளை நிராகரிக்க வேண்டாம். அலுவலக ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.
மிதுனம்: எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வருவதால் மனநிம்மதி கிட்டும். மனைவிவழியில் மதிப்பு உயரும். தாயாரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
கடகம்: பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். மனதில் கவலைகள் வரும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும். வியாபாரத்தில் பங்குதாரரை அனுசரித்து நடக்கவும்.
சிம்மம்: பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கான மாற்று வழியை கண்டறிவீர். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். முகப்பொலிவு, ஆரோக்கியம் கூடும். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர்கள்.
கன்னி: வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். பெரிய பதவிக்கு உங்கள் பெயர் பரிந்துரைக்கப்படும். தாயாரின் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களை சமாளிப்பீர். அவர்களின் கருத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கவும். உத்தியோகம் சிறக்கும்.
துலாம்: சொந்த ஊரில் மதிக்கப்படுவீர். கவுரவப் பதவி தேடி வரும். மூத்த சகோதர, சகோதரிகளுடன் இருந்த கருத்துமோதல் நீங்கும். ஷேர், கமிஷன் வகைகளால் பணம் வரும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது. வியாபாரத்தில் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்.
விருச்சிகம்: வீட்டில் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். வீட்டை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் இணக்கமான போக்கை கடைபிடிக்கவும். வியாபாரம் திருப்தி தரும்.
தனுசு: மகனின் படிப்பு, மகளின் திருமணம் தொடர்பாக அலைச்சல், செலவு இருக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலக ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்க வேண்டிவரும்.
மகரம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர். மனைவி, தாயாரின் உடல்நிலை சீராகும். உறவினர், நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பழைய கடன் அடைபடும். பிள்ளைகளால் பெருமை உண்டு. வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
கும்பம்: உங்களின் குறிக்கோளை அடைய முயற்சிப்பீர். பணவரவு உண்டு. குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். தந்தையின் உடல்நிலை சீராகும். தாயாரின் மருத்துவ செலவுகள் குறையும். வியாபாரத்தில் குழப்பம் சீராகும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.
மீனம்: மனதில் உற்சாகம் பிறக்கும். பிரபலங்களுக்கு நண்பராவீர். அவர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடுவதை தவிர்க்கவும். தொழிலில் வேலையாட்களை மாற்றுவீர்.