

மேஷம்: முகப்பொலிவு கூடும். அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சோர்வு நீங்கும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
ரிஷபம்: எதிலும் வெற்றி பெறுவீர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். எதிர்பாராத பணவரவால் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர். பிள்ளைகள் பொறுப்பறிந்து செயல்படுவர். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரம் லாபம் தரும். உத்தியோகம் சிறக்கும்.
மிதுனம்: எதிர்பார்த்த உதவி கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். குடும்பத்தில் அமைதி நிலவும். உடல் அசதி விலகும். பணவரவு உண்டு. வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர். அலுவலகரீதியாக பயணம் மேற்கொள்வீர். மேலதிகாரி பாராட்டுவார்.
கடகம்: தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போகவும். உடன்பிறந்தவர்களை அனுசரித்து நடந்து கொள்வதால் பூர்வீக சொத்து பிரச்சினைகள் சுமுகமாக முடியும். மன நிம்மதி பிறக்கும். வியாபாரத்தில் போட்டி இருக்கும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
சிம்மம்: பணவரவு திருப்தி தரும். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போவீர். உடல்சோர்வு, வயிற்றுவலி வந்து போகும். ஊர் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் குழப்பங்கள் நீங்கி நிம்மதி பிறக்கும்.
கன்னி: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர். சகோதர வகையில் ஆதரவு உண்டு. தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை தீரும். பழைய வாகனத்தை மாற்றுவீர். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரம், உத்தியோகத்தில் ஓரளவு நல்ல முன்னேற்றம் காண்பீர்.
துலாம்: பணவரவு ஓரளவு திருப்தி தரும். உறவினர், நண்பர்களின் வருகையுண்டு. குழப்பங்கள் அனைத்தும் நீங்கி குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். உடல் உபாதைகள் நீங்கும். அலுவலகத்தில் மேலதிகாரி ஆதரவு தருவார். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்பனையாகும்.
விருச்சிகம்: மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். மனைவியுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். வியாபாரரீதியாக வெளியூர் பயணம் செல்ல வேண்டி வரும். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும்.
தனுசு: குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு பிறக்கும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். பணவரவு கூடும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும்.
மகரம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். விவாதங்களை தவிர்ப்பீர். பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டவும். சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.
கும்பம்: நெடுநாளாக திட்டமிட்டுக் கொண்டிருந்த சில காரியங்களை செயல்படுத்திக் காட்டுவீர். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். அலுவலகத்தில் பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்பார்கள். அலுவலகத்தில் தலைமையிடத்தின் ஆதரவை பெறுவீர்.
மீனம்: புதிய எலட்ரானிக்ஸ், கலை பொருட்கள் வீடு வந்து சேரும். பழைய சொந்தங்களால் ஆதாயம் உண்டு. தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். குழப்பங்கள் நீங்கும். வீடு, வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில் லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.