மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 09 ஜூன் 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 09 ஜூன் 2026
Updated on
2 min read

மேஷம்: திட்டமிட்ட வேலையை முடிக்க, வேகத்தை கூட்டுவீர். விஐபிகளின் உதவியுடன் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும்.

ரிஷபம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சேமிக்கும் எண்ணம் மனதில் தோன்றும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வியாபாரத்தில் வேற்றுமொழி வாடிக்கையாளர்கள் வருவார்கள். புதிய பங்குதாரரின் ஆலோசனையை ஏற்கவும். உத்தியோகம் சிறக்கும்.

மிதுனம்: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அலுவலகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர்கள்.

கடகம்: அரசு காரியங்களில் இருந்த தடைகள் விலகும். வெளி வட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர். குழப்பம் நீங்கி அலுவலகத்தில் நிம்மதியுண்டு.

சிம்மம்: வீண் அலைச்சல், காரியத் தடைகள் வரக்கூடும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவும். அலுவலகத்தில் கோப்புகளை கவனமாகக் கையாளவும்.

கன்னி: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிட்டும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அலுவலகத்தில் இழுபறியாக இருந்த பணிகளை முடிப்பீர். வியாபார ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும்.

துலாம்: பணவரவு உண்டு. கைமாற்றாக வாங்கியிருந்த தொகையை தந்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரம் தொய்வின்றி விறுவிறுப்பாக அமையும். புதிய பங்குதாரர் கிடைப்பார். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்: ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் ஓடி வந்து பேசுவார்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் சக ஊழியருடன் இணக்கமாக செயல்படுவது நன்மை தரும்.

தனுசு: பிள்ளைகளின் பிடிவாதம் குறைந்து உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பர். மகளுக்கு உடனே திருமணம் கூடி வரும். உடன் பிறந்தவர்களின் ஆதரவுடன் பூர்வீக வீடு, நிலத்தை விற்பனை செய்வீர். வியாபாரத்தில் வராக் கடன் வந்து சேரும். அலுவலகத்தில் அமைதி காப்பீர்.

மகரம்: வெளிவட்டாரத்தில் கவுரவப் பதவிகள் தேடி வரும். புது வேலை அமையும். மனைவிவழி உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வாகனப் பழுது நீங்கும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்.

கும்பம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வாகனத்தை மாற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் நட்புறவாடுவார்கள். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.

மீனம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போகவும். மகனின் படிப்பு, மகளின் திருமணம் என்று அலைச்சல் இருக்கும். டென்ஷன் கூடும். எதிலும் நிதானம் தேவை. வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும்.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 09 ஜூன் 2026
ஜோதிட நாள்காட்டி 09.06.2026 | வைகாசி 26 - செவ்வாய்க்கிழமை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in