மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 08 ஜூன் 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 08 ஜூன் 2026
Updated on
1 min read

மேஷம்: குடும்பத்தில் சலசலப்புகள் ஓய்ந்து மகிழ்ச்சி, அமைதி உண்டாகும். பிள்ளைகளால் உறவினர் மத்தியில் அந்தஸ்து உயரும். பழைய பிரச்சினைகளை பேசித் தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் பணிச் சுமை குறையும்.

ரிஷபம்: நேர்கொண்ட பார்வையுடன் முக்கிய முடிவு எடுப்பீர்கள். பிரபலங்களிடம் இருந்து உரிய நேரத்தில் உதவி கிடைக்கும். வெளியூர் பயணம் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் ஊழியர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். ஆன்மிக நாட்டம் கூடும்.

மிதுனம்: நீண்டநாள் தேவைகள், விருப்பங்கள் பூர்த்தியாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் வீண் அலைச்சல், டென்ஷன் விலகும். எக்காரியத்திலும் நிதானம் தேவை.

கடகம்: திடீர் பயணம், வீண் அலைச்சல், அசதி, டென்ஷன் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. பண வரவு, பொருள் வரவு உண்டாகும். வியாபாரத்தில் வேலைச் சுமை குறையும். நாடி வந்தவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்வீர்கள்.

சிம்மம்: எதிலும் அவசர முடிவு எடுக்க வேண்டாம். வீண் செலவுகள் இருக்கும். குடும்பத்தினரின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். தொழில், வியாபாரத்தில் நிதானம் தேவை. யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது. பல வகையிலும் பொருட்கள் சேரும்.

கன்னி: நீங்கள் ஏற்கெனவே செய்த உதவிகளுக்கு பாராட்டு கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் மரியாதை கூடும். உங்களைவிட்டு விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து உறவாடுவார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள்.

துலாம்: இங்கிதமான, சாதுர்யமான, பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். உற்சாகம், தோற்றப் பொலிவு அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் நம்பிக்கை தரும். பயணத்தால் ஆதாயம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.

விருச்சிகம்: வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். மனைவி வழி உறவினர்கள் உங்கள் நல்ல மனதைப் புரிந்துகொண்டு, தக்க சமயத்தில் உதவுவார்கள். நண்பர்கள் உதவியுடன் புதிய வேலை கிடைக்கும். வியாபாரம் லாபம் தரும்.

தனுசு: சுறுசுறுப்புடன் செயல்பட்டு, வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். விருந்தினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பு கூடும். உங்கள் சிந்தனைத் திறன் அதிகரிக்கும். உடல்நலம் சீராகும். வியாபாரம் சூடுபிடிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

மகரம்: குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்துகொள்வீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வழக்கில் இருந்த தேக்கநிலை மாறும். விஐபிகளின் அறிமுகத்தால், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. ஆன்மிகம், யோகாவில் நாட்டம் அதிகரிக்கும்.

கும்பம்: அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். பெரியவர்களின் பேச்சைக் கேட்டு முடிவுகளை எடுங்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு. சகோதரர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். புதியவர்களை நம்பி பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம்.

மீனம்: தள்ளிப்போன சுபகாரியங்கள் கைகூடி வரும். சுபச் செலவு அதிகரிக்கும். பழுதான வீடு, வாகனத்தை மாற்றுவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். மகான்கள், பெரியவர்களின் ஆசி கிடைக்கும்.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 08 ஜூன் 2026
ஜோதிட நாள்காட்டி 08.06.2026 | வைகாசி 25 - திங்கள்கிழமை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in