மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 04 மே 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 04 மே 2026
Updated on
2 min read

மேஷம்: குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம். யாரிடமும் வீண் வாக்குவாதம் செய்வது, பழைய சம்பவங்களைப் பேசுவது வேண்டாம். பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும்.

ரிஷபம்: திடீர் பயணங்களால் அலைச்சல், அசதி இருக்கும். குடும்பத்தினரிடம் அனுசரித்து செல்லுங்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். அலுவலகப் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

மிதுனம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். பெற்றோர் உடல்நிலை சீராகும். மருத்துவச் செலவுகள் படிப்படியாக குறையும். உறவினர்கள், நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பிள்ளைகளால் மதிப்பு, மரியாதை உண்டாகும்.

கடகம்: புதியவர்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். வீண் செலவைக் குறைத்து, வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்குகளில் சாதகமான திருப்பம் ஏற்படும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

சிம்மம்: குடும்பத்தில் சலசலப்புகள் ஓய்ந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு மகிழ்ச்சி, அமைதி திரும்பும். வெளிநாட்டுப் பயணத்துக்கான விசா கிடைக்கும். புதிய நபர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாளுவீர்கள்.

கன்னி: பிரச்சினையில் இருந்து விடுபட மாற்று வழியைக் கண்டறிவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உற்சாகம், தோற்றப் பொலிவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு. யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.

துலாம்: உங்களது சாதுர்யமான, வெளிப்படையான பேச்சால் சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். எதிலும் மகிழ்ச்சி கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி அன்யோன்யம் பிறக்கும். அலுவலகத்தில் பாராட்டு பெறுவீர்கள். பண வரவு உண்டு.

விருச்சிகம்: கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் சமாளிப்பீர்கள். நாடி வந்தவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்வீர்கள். அரசு, வங்கி வகையில் ஆதாயம், அனுகூலம் உண்டு.

தனுசு: வீட்டு உபயோகப் பொருட்கள், மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் பண உதவி கிடைக்கும். வாகனப் பழுது நீங்கும். தொழில், வியாபார ரீதியாக சில முக்கியப் பிரமுகர்களை சந்திப்பீர்கள். அதனால், ஆதாயமும் உண்டாகும்.

மகரம்: பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்ளும் அளவுக்கு நெருக்கமாவீர்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் நாட்டம் அதிகரிக்கும். தொழிலில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட பணியாளர்களை மாற்றுவீர்கள். சொத்துப் பிரச்சினைகள் தீரும்.

கும்பம்: வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை, அந்தஸ்து உயரும். பொதுக் காரியங்களில் ஈடுபட்டு பாராட்டு பெறுவீர்கள். குடும்பத்தில் நல்ல காரியங்கள் ஏற்பாடாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் சூடுபிடிக்கும்.

மீனம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வீண், ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த முக்கிய நபர்களை சந்திப்பீர்கள். அலுவலக ரீதியான பிரச்சினைகள் ஓயும்.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 04 மே 2026
ஜோதிட நாள்காட்டி 04.05.2026 | சித்திரை 21 - திங்கள்கிழமை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in