மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 30 ஏப்ரல் 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 30 ஏப்ரல் 2026
Updated on
2 min read

மேஷம்: சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர். தம்பதிக்குள் பரஸ்பரம் புரிந்து கொள்வீர்கள். குழப்பம் நீங்கி அலுவலகத்தில் நிம்மதி பிறக்கும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்.

ரிஷபம்: அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிட்டும். முன்கோபத்தை குறைப்பீர். ஷேர் மூலம் பணம் வரும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கிகள் வசூலாகும். அலுவலக ரீதியாக பயணம் மேற்கொள்வீர். உத்தியோகம் சிறக்கும்.

மிதுனம்: நம்பிக்கைக்கு உரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர். குடும்பத்தில் நிம்மதியுண்டு. வியாபாரத்தில் பழைய பணியாட்களை மாற்றுவீர். புதிய பங்குதாரர்களின் ஆலோசனைகளை ஏற்கவும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

கடகம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தாய்வழி உறவினர்கள், நண்பர்கள் வீடு தேடி வருவர். கையில் பணம் புரளும். அலுவலகரீதியாக இருந்து வந்த குழப்பங்கள் தீரும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்.

சிம்மம்: பணவரவு உண்டு. உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்தவர்கள் உங்களை தேடி வருவார்கள். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

கன்னி: தம்பதிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர். முன்கோபம் விலகும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்.

துலாம்: குடும்பத்தினருடன் சிறு சிறு கருத்துமோதல்கள் வரலாம். சில வேலைகளை முடிக்க போராட வேண்டி இருக்கும். வியாபாரத்தில் பங்குதாரரின் அறிவுரைகளை ஏற்று செயல்படவும். அலுவலகத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்.

விருச்சிகம்: கோபத்தைக் கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பு அறிந்து செயல்படுவர். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டு. அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.

தனுசு: உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிட்டும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர்.

மகரம்: பெற்றோரின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். மனவலிமையுடன் எதையும் முடித்து காட்டுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனைகள் ஏற்கப்படும். வியாபார நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள்.

கும்பம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. கூட்டுத்தொழில் பங்குதாரர்களுடன் இருந்த குழப்பம் நீங்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். பொறுப்புகள் கூடும்.

மீனம்: திட்டமிட்ட வேலையை முடிக்க போராட வேண்டியிருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து போகவும். வியாபாரத்தில் குழப்பங்கள் வந்து போகும். எதிலும் அவசரம் வேண்டாம். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடுவதை தவிர்க்கவும்.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 30 ஏப்ரல் 2026
மேஷம், ரிஷபம், மிதுனம்: வார பலன்கள் @ ஏப்.30 - மே 6

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in