

மேஷம்: வெளியூர், வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்திருக்கும் நல்ல செய்தி வரும். குடும்பத்தினரின் ஆசைகள், விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றுவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள்.
ரிஷபம்: எதிலும் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். வீண், ஆடம்பரச் செலவுகளைக் கட்டுப்படுத்தி, சேமிப்பில் கவனம் செலுத்துங்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் சமாளி்ப்பீர்கள். அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.
மிதுனம்: புதிய மின்னணு, மின்சார சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் சலசலப்புகள் ஓய்ந்து மகிழ்ச்சியும், அமைதியும் திரும்பும். நீண்ட நாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார்.
கடகம்: நெருங்கிய சொந்த பந்தங்களால் வீண் செலவுகள், திடீர், பயணம், அலைச்சல் வரக்கூடும். கணவன் - மனைவிக்குள் தேவையற்ற மனஸ்தாபம் ஏற்படும். அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். இழுபறியாக இருந்த சொத்துப் பிரச்சினை தீரும்.
சிம்மம்: விருந்தினர்கள் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். தங்கம், வெள்ளி ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்யோகத்தில் உயர் அதிகாரிகள் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். எதிலும் நிதானம் அவசியம்.
கன்னி: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று நடப்பார்கள். பழுதான வாகனத்தை சரிசெய்வீர்கள். பிள்ளைகளிடம் இருந்த பிடிவாதம் குறையும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும். ஆன்மிகம், தியானத்தில் ஈடுபாடு உண்டாகும்.
துலாம்: ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து, சிக்கனமாக இருங்கள். குடும்பத்தில் யாரிடமும் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். சொந்த பந்தங்களால் அன்புத் தொல்லைகள் ஏற்படும். வியாபாரத்தில் கவனம் தேவை. பண வரவு, பொருள் வரவு உண்டு.
விருச்சிகம்: கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். சகோதர வகையில் இருந்த அலைச்சல் விலகும். பெரிய நிறுவனத்தில் வேலை அமையும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். தொழில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். பேச்சில் பொறுமை தேவை.
தனுசு: குடும்பத்தினருடன் கலந்துபேசி, முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பை உணர்ந்து நடப்பார்கள். விலகிச் சென்ற நண்பர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். பொருட்கள் சேரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.
மகரம்: எதிர்பாராத பண வரவால் பழைய கடனை பைசல் செய்வீர்கள். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.
கும்பம்: வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வங்கியில் கேட்ட கடனுதவி கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். வெளியூர் பயணம் உற்சாகம் தரும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
மீனம்: புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். அரசு, வங்கி சம்பந்தப்பட்ட வேலைகள் அதிகாரிகள் உதவியுடன் சுமுகமாக முடியும்.