

மேஷம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். மூத்த சகோதரர்கள் உதவி புரிவர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி ஏற்பாடாகும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் புது அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.
ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வாகனத்தை மாற்றுவீர்கள். நெடுநாட்களுக்கு பிறகு பால்ய நண்பர்களை சந்திப்பீர். வியாபாரத்தில் பாக்கிகளை வசூலிக்க போராட வேண்டியிருக்கும். அலுவலகத்தில் குழப்பங்கள் நீங்கி நிம்மதி கிட்டும்.
மிதுனம்: வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். சகோதர-சகோதரிகள் பாசமாக இருப்பர். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். அலுவலகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்.
கடகம்: சோர்வு, தூக்கமின்மை வரக் கூடும். தாயார், மனைவியின் உடல்நலத்தில் அக்கறை செலுத்தவும். குடும்பத்தில் மனக்கசப்புகள் இருக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபமுண்டு. பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படவும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
சிம்மம்: இழுபறியான பணிகளை விரைந்து முடிப்பீர். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். சோர்வை ஒதுக்கிவிட்டு சுறுசுறுப்பாக செயல்படவும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும். வியாபாரத்தில் பாக்கியை போராடி வசூலிப்பீர். உத்தியோகம் சிறக்கும்.
கன்னி: குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். பேச்சில் இனிமை பிறக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருகை தருவர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
துலாம்: குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து போகவும். வாகனத்தில் கவனம் தேவை. உடல் சோர்வு, அலைச்சல் ஏற்படும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள்.
விருச்சிகம்: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக செலவு, அலைச்சல் இருக்கும். பணவரவு திருப்தி தரும். கடந்த கால சுகமான அனுபவங்கள் மனதில் நிழலாடும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனைகளை ஏற்கவும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்.
தனுசு: வெளிவட்டாரத்தில் புதியவர்களின் அறிமுகம் கிட்டும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி பெறுவீர். அலுவலகத்தில் சவாலான வேலைகளையும் எளிதாக முடித்து நற்பெயர் பெறுவீர். மேலதிகாரிகள் பாராட்டுவர். வியாபாரத்தில் பற்று வரவு உயரும்.
மகரம்: பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அவர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். தாயாரின் உடல்நலம் திருப்தி தரும். முன்கோபத்தை குறைப்பது நல்லது. வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்கு விற்றுத் தீரும். அலுவலகத்தில் பிறர் விஷயத்தில் தலையிடாதீர்.
கும்பம்: குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை நீங்கும். பூர்வீக சொத்து வழக்கில் சாதகமான தீர்வு கிட்டும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். பொறுப்பு கூடும்.
மீனம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் நம்பிக்கை தருவர். ஆடம்பர செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. அலுவலகத்தில் அடுத்தவரை பற்றி தலைமையிடத்தில் புகார் கூற வேண்டாம். வியாபாரத்தில் லாபம் உண்டு.