Last Updated : 21 May, 2023 05:53 AM

 

Published : 21 May 2023 05:53 AM
Last Updated : 21 May 2023 05:53 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: தடைபட்டிருந்த காரியங்களெல்லாம் நல்ல விதத்தில் முடிவடையும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் நல்ல தீர்வு காண்பீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

ரிஷபம்: வேலைச்சுமை அதிகமாகும். தவிர்க்க முடியாத பயணங்களும் இருக்கும். தூக்கமும் கொஞ்சம் குறையும். வீண் விவாதங்களை தவிர்க்கப் பாருங்கள். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

மிதுனம்: விருந்தினர் வருகையால் செலவினங்கள் கூடும். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்
திருந்த புண்ணிய தலங்களுக்குச் செல்ல திட்டமிடு வீர்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

கடகம்: புது வேலை கிடைக்கும். வாகனம் வாங்குவீர்கள். வீட்டில் சமையலறை, படுக்கையறையை நவீனப் படுத்துவீர்கள். புதிய தொழில் தொடங்க வங்கி கடனுதவி எளிதாகக் கிடைக்கும்.

சிம்மம்: இழுபறியாக இருந்து வந்த வேலைகள் முடியும். தந்தையின் உடல் நிலை சீராகும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் சாதகமாகும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். பணவரவு உண்டு.

கன்னி: தைரியம் பிறக்கும். வருங்காலம் பற்றிய பயமும் விலகும். பணப் பிரச்சினையை சமாளிக்க வழி கிடைக் கும். சொந்தங்களிடையே இருந்து வந்த சலசலப்புகள் நீங்கும். நண்பர்கள் ஆதரவுக் கரம் நீட்டுவர்.

துலாம்: செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். அதற்கேற்ப வருமானத்தை பெருக்க வேண்டுமென்று யோசிப் பீர்கள். தங்க ஆபரணங்களை கவனமாக கையாளுங் கள். அக்கம் - பக்கத்தினரிடம் எச்சரிக்கை தேவை.

விருச்சிகம்: எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பணவரவு உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடியும். கிராமத்து திருவிழாவில் முதல் மரியாதை கிடைக்கும்.

தனுசு: பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. அவர்கள் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுத்து மகிழ்வீர்கள். ஷேர் மூலமாக பணவரவு உண்டு.உறவினர்களின் வருகையால் வீடு களை கட்டும்.

மகரம்: பிரச்சினைகளை சமாளிக்கும் சக்தி கிடைக்கும். ஓரளவு பணவரவு உண்டு. பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தேவையில்லாத விவாதங்களில் கலந்து கொள்ள வேண்டாம். திடீர் பயணம் ஏற்படும்.

கும்பம்: பூர்வீக வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். மின் சாதனங்களை மாற்றி அமைக்கும் முயற்சிகளில் இறங்குவீர்கள். பழைய கடனை நினைத்து அவ்வப் போது பயம் வரும். உங்கள் திறமை வெளிப்படும்.

மீனம்: தொட்டதெல்லாம் துலங்கும். தடைகள் அனைத்தும் நீங்கும். இழுபறியாக இருந்து வந்த வேலைகள் முடிவடையும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களும் உடனடியாக நிறைவேறும். பணவரவு உண்டு.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x