Published : 14 Apr 2023 05:32 AM
Last Updated : 14 Apr 2023 05:32 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: சாணக்கியத்தனமாக பேசி காரியம் சாதிப்பீர்கள். உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் பணத்தை திருப்பித் தருவார்கள். புதிய வீடு கட்டுவதற்கான முயற்சி மேற்கொள்வீர்கள்.

ரிஷபம்: உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர்கள். உங்கள் ரசனைக் கேற்ப வீடு, வாகனம் அமையும். நீண்ட நாள் பேசாது இருந்த உறவினர், உங்களிடம் பேசுவார்.

மிதுனம்: சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ளாதீர்கள். முக்கிய பணிகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாக முடிப்பது நல்லது.

கடகம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப் பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.

சிம்மம்: வெளிநாட்டு பயணம், வேற்று மதத்தினரால் உதவி எல்லாம் உண்டு. பிரபலங்களுக்கு நண்பராவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தாயின் உடல் நலத்தை கவனித்துக் கொள்ளவும்.

கன்னி: வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தாயாரின் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிது வாங்க முயற்சிப்பீர்கள்.

துலாம்: இழுபறியாக இருந்த வேலைகள் விரைந்து முடியும். மனக்குழப்பம் நீங்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பணவரவு உண்டு.

விருச்சிகம்: தொட்ட காரியம் துலங்கும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களுக்கு மதிப்பளிப்பீர்கள். பழைய கடன்களில் ஒன்று தீர வழி கிடைக்கும்.

தனுசு: அனுபவப்பூர்வமாகவும், எதார்த்தமாகவும் பேசுவீர் கள். குடும்பத்தில் குழப்பங்களை ஏற்படுத்திய உறவினர், நண்பர்களின் சுயரூபத்தை கண்டறிந்து ஒதுக்குவீர்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

மகரம்: வேலைச்சுமை அதிகரிக்கும். அவ்வப்போது உடல்நிலை லேசாக பாதிக்கும். நன்கு அறிமுகமாகாத வர்களை வீட்டில் சேர்க்க வேண்டாம். நீண்ட நாளாக நடந்து வந்த வழக்கு முடிவுக்கு வரும்.

கும்பம்: சேமிப்புகள் கரையும். வாகனத்தை இயக்கும்போது கவனத்தை சிதற விடாதீர்கள். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். முக்கிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும்.

மீனம்: சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். மூத்த சகோதர, சகோதரிகளுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். ஷேர், கமிஷன் வகைகளால் பணம் வரும். பேச்சில் நிதானம் காக்கவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x