Published : 27 Mar 2023 05:34 AM
Last Updated : 27 Mar 2023 05:34 AM
மேஷம்: கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி, அன்யோன்யம் அதிகரிக்கும். சலுகை விலையில் புதிய வாகனம் வாங்குவீர்கள். மனதுக்கு பிடித்த ஆடை, ஆபரணங்கள் சேரும்.
ரிஷபம்: கனவுத் தொல்லை வந்து நீங்கும். பழைய கசப் பான சம்பவங்களை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். முன்கோபம் கூடாது. ஆன்மிகம், யோகாவில் நாட்டம் அதிகரிக்கும்.
மிதுனம்: எதிர்மறை எண்ணத்துக்கு இடம்தராமல் நம்பிக்கை யுடன் செயல்படுங்கள். சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை அறிவீர்கள். குடும்பத்தில் சின்னச் சின்ன சச்சரவுகள் வந்து நீங்கும்.
கடகம்: பல வகையிலும் பணப் புழக்கம் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். செல்லும் இடமெல்லாம் சிறப்பு சேரும். வெளியூர் பயணம் இனிமையாக அமையும்.
சிம்மம்: உற்சாகம், தோற்றப் பொலிவு அதிகரிக்கும். எதிர்மறை எண்ணங்கள் விலகும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். தீராமல் இருந்த பிரச்சினைகளை சுமுகமாக தீர்ப்பீர்கள்.
கன்னி: ஆன்மிகம், தியானம், யோகாவில் நாட்டம் அதி கரிக்கும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வருமானம் உயரும். எதிர்பாராத தொகை தக்க சமயத்தில் கைக்கு வந்துசேரும்.
துலாம்: வாகன வகையில் தேவையற்ற அலைச்சல், செலவுகள் ஏற்படும். பிள்ளைகளுடன் வாக்குவாதம் வரக்கூடும். அவர்களது நட்பு வட்டத்தை கண் காணியுங்கள். கலைப் பொருட்கள் சேரும்.
விருச்சிகம்: இழுபறியாக இருந்த கல்யாண பேச்சு வெற்றி யடையும். உறவினர்கள் உங்கள் சகிப்புத் தன்மையை பாராட்டுவார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு, பால்ய நண்பர்களுடன் பேசி மகிழ்வீர்கள்.
தனுசு: அக்கம் பக்கத்தினருடன் இருந்த மோதல் போக்கு நீங்கும். சகோதர உறவுகள் இடையே மனம்விட்டு பேசி, நல்ல முடிவுகள் எடுப்பீர்கள். இழுபறியாக இருந்த சொத்து பிரச்சினை நீங்கும்.
மகரம்: வருங்கால வளர்ச்சிக்கான திட்டங்களை தீட்டுவீர்கள். தைரியமாக, தன்னிச்சையாக செயல்பட்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
கும்பம்: மனக் குழப்பங்கள், வீண் விவாதங்கள் நீங்கும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவது போன்ற முயற்சிகள் சாதகமாக முடியும்
மீனம்: ஆடை, அணிகலன் சேரும். கல்யாண முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். கைமாற்றாக வாங்கிய பணத்தை தந்து முடிப்பீர்கள். பண வரவு உண்டு. அனைவரையும் அரவணைத்து செல்வீர்கள்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT