Published : 03 Jan 2021 07:00 am

Updated : 03 Jan 2021 07:00 am

 

Published : 03 Jan 2021 07:00 AM
Last Updated : 03 Jan 2021 07:00 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

daily-horoscope

மேஷம்: பழைய வாகனத்தை மாற்றிவிட்டு புதியது வாங்குவீர்கள். வீடு, வாகனம் வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும்.

ரிஷபம்: சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும் மின்சாதனங்கள் வாங்குவீர்கள். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.


மிதுனம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். இருப்பினும் சேமித்து வைக்க முடியாதபடி செலவுகள் இருக்கும். சகோதரர் வகையில் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும்.

கடகம்: வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். புது வாகனம், ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும்.

சிம்மம்: அடிக்கடி உணர்ச்சிவசப்படுவீர்கள். உடல் நலத்தில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். கலைப்பொருட்கள் சேரும்.

கன்னி: திட்டமிட்டபடி பயணங்கள் அமையும். நீண்டநாட்களாக விலகியிருந்த நண்பர்கள், உறவினர்கள் மீண்டும் வந்து பேசுவார்கள். எதிர்பாராத பணவரவு உண்டு.

துலாம்: பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். நீண்டநாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு.

விருச்சிகம்: கடந்தகால இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். நண்பர்கள், உறவினர் வருகையால் வீடு கலகலப்பாகும்.

தனுசு: பிள்ளைகள் ஆறுதலாக இருப்பார்கள். வெளிநாட்டிலிருப்பவர்கள், வேற்றுமொழிப் மொழிப் பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். வீட்டை சீரமைப்பீர்கள்.

மகரம்: ஒருவித சலிப்பு, வெறுப்பு, தாழ்வுமனப்பான்மை வந்து போகும். கொஞ்சம் நேரம் ஒதுக்கி யோகா, தியானம் செய்வது நல்லது. அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

கும்பம்: எத்தனை தடைகள் வந்தாலும் போராடி வெற்றி பெறும் சக்தி கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். மூத்த சகோதரர் தக்க சமயத்தில் உதவுவார்.

மீனம்: தோற்றப் பொலிவு கூடும். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சவாலான காரியங்களைக் கூட சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.



Daily horoscopeஇந்தநாள் உங்களுக்கு எப்படி12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x