Published : 22 Nov 2020 06:37 am

Updated : 22 Nov 2020 06:37 am

 

Published : 22 Nov 2020 06:37 AM
Last Updated : 22 Nov 2020 06:37 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

daily-horoscope

மேஷம்: வெளியூரிலிருந்து உறவினர், நண்பர்களின் வருகையுண்டு. குடும்பத்தினரின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். புண்ணிய தலங்கள் செல்ல திட்டமிடுவீர்கள். பணவரவு உண்டு.

ரிஷபம்: மன உளைச்சல் நீங்கும். கலகலப்பான சூழல் நிலவும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவீர்கள். தந்தைவழி உறவினர்களால் மகிழ்ச்சியுண்டு. கலைப்பொருட்கள் சேரும்.


மிதுனம்: திறமையுடன் செயல்பட்டு கடினமான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். மனக்குழப்பம் நீங்கும். வேற்று மதத்தினரால் நன்மை கிட்டும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை.

கடகம்: கணவன் - மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வாகனம் செலவு வைக்கும்.

சிம்மம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பால்ய நண்பரை சந்திப்பீ்ர்கள்.

கன்னி: அரசு காரியங்களில் இருந்துவந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். விலகியிருந்த சொந்தபந்தங்கள் வலிய வந்து பேசுவார்கள். பணவரவு திருப்தி தரும்.

துலாம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வழக்குகள் சாதகமாகும். நவீன மின்சாதனம் வாங்குவீர்கள்.

விருச்சிகம்: புது வீடு, மனை, வாகனம் வாங்குவது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள். தாயாரின் உடல்நலம் பாதிக்கக் கூடும். சகோதரரின் உதவி கிடைக்கும்.

தனுசு: வீடு, வாகனத்தை மாற்றுவீர்கள். நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்பொழுது பாராட்டப்படுவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.

மகரம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். சிந்தனைத்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உங்களின் ஆரோக்கியம் சீராகும்.

கும்பம்: கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்சினைகள் வந்து நீங்கும். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள்.

மீனம்: பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். எதிர்மறை எண்ணங்கள் வரக் கூடும். உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை. யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

இந்தநாள் உங்களுக்கு எப்படி12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்Daily horoscope

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x