Published : 20 Nov 2020 06:15 am

Updated : 20 Nov 2020 06:15 am

 

Published : 20 Nov 2020 06:15 AM
Last Updated : 20 Nov 2020 06:15 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

daily-horoscope

மேஷம்: உங்களின் நிர்வாகத் திறன் பளிச்சிடும். பணவரவு திருப்தி தரும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

ரிஷபம்: எதிலும் உங்கள் கை ஓங்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வாகனத்தை சீர் செய்வீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.


மிதுனம்: அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியோ உத்தரவாதமோ தர வேண்டாம். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்க பிரச்சினைகள் வந்து விலகும்.

கடகம்: புது வாகனம் வாங்குவீர்கள். வரவேண்டிய தொகை கைக்கு வரும். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள். பால்ய நண்பரை சந்திப்பீர்கள். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். உங்களின் ஆளுமைத் திறன் வெளிப்படும். பணபலம் உயரும். அரசியலில் செல்வாக்குக் கூடும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

கன்னி: உறவினர்களின் கனிவான விசாரிப்பால் ஆறுதல் அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். மனைவிவழியில் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.

துலாம்: பழுதான வண்டியை மாற்றுவீர்கள். கடனை தீர்க்க வழி பிறக்கும். கணவன் - மனைவிக்குள் நிலவிய ஈகோ பிரச்சினை தீரும். எதிர்காலத் திட்டம் குறித்து ஆலோசிப்பீர்கள்.

விருச்சிகம்: சவாலான விஷயங்களையும் எளிதாக முடிப்பீர்கள். உங்களின் தனித்திறமை அனைத்திலும் பளிச்சிடும். விஐபிகளால் பாராட்டப்படுவீர்கள். பணவரவு உண்டு.

தனுசு: பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். மூத்த சகோதரர் தக்க சமயத்தில் உதவுவார். சொந்தபந்தங்களில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள்.

மகரம்: உங்களுடன் பழகிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை இனம் கண்டு ஒதுக்குவீர்கள். இடம், பொருள் ஏவலறிந்து பேசுங்கள். அடுத்தவர் விவகாரத்தில் தலையிடாதீர்கள்.

கும்பம்: வீண் வறட்டுக் கவுரவத்துக்காக சேமிப்புகளை கரைக்காதீர்கள். வேலைச்சுமை அதிகரிக்கும். அடுத்தடுத்த செலவுகளால் கடன் வாங்கும் சூழல் ஏற்படும். வாகனம் செலவு வைக்கும்.

மீனம்: வீட்டுக்குத் தேவையான மின்சாதனங்கள் வாங்குவீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

Daily horoscopeஇந்தநாள் உங்களுக்கு எப்படி12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x