Published : 13 Oct 2020 07:03 AM
Last Updated : 13 Oct 2020 07:03 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: உங்களின் உழைப்புக்கேற்ப வருமானம் உயரும். பிள்ளைகளின் விருப்பங்களுக்கு ஏற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி வரும்.

ரிஷபம்: பழைய இனிய சம்பவங்களை அடிக்கடி நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள் தாயாருக்கு மருத்துவ செலவு வரக்கூடும். சில காரியங்களில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு.

மிதுனம்: சகோதரர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். பூர்வீக சொத்து உங்கள் கைக்கு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பணவரவு திருப்தி தரும்.

கடகம்: பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும். உடல் நிலை சீராகும். நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். கணவன் - மனைவிக்குள் இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும்.

சிம்மம்: வேலைகள் தடைபட்டு முடியும். சின்னச் சின்ன பிரச்சினைகள் குடும்பத்தில் தலைதூக்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள்.

கன்னி: தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். பணப் பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும்.

துலாம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பழைய சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம்: புது பொறுப்பும், பதவியும் தேடி வரும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிட்டும். உறவினர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். வாகனத்தை சீர்செய்வீர்கள்.

தனுசு: வழக்கில் திடீர் திருப்பம் உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வரவேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள்.

மகரம்: சிலரின் விமர்சனங்களுக்கும், கேலி பேச்சுக்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் அனுசரித்து செல்லுங்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

கும்பம்: நல்ல வாய்ப்புகள் தேடி வரும். சகோதரர் வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

மீனம்: பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். விருந்தினர் வருகையால் வீடு கலகலப்பாகும். நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x