Published : 09 Sep 2020 05:56 am

Updated : 09 Sep 2020 05:56 am

 

Published : 09 Sep 2020 05:56 AM
Last Updated : 09 Sep 2020 05:56 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

daily-horoscope

மேஷம்: தோற்றப் பொலிவு கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும்.

ரிஷபம்: செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம்.


மிதுனம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் யாரையும் அநாவசியமாக விமர்சிக்க வேண்டாம். எதிர்மறை எண்ணங்கள் அடிக்கடி தலைதூக்கும்.

கடகம்: சொந்த முயற்சியால் முன்னேறுவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். சொந்தபந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். பணவரவு திருப்தி தரும்.

சிம்மம்: புகழ், கவுரவம் கூடும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். விஐபிகளால் ஆதாயம் கிடைக்கும். சுபச் செலவுகள் அடுத்தடுத்து வரும்.

கன்னி: குடும்பத்தில் குழப்பம் நீங்கி ஒற்றுமை நிலவும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். மதிப்பு, மரியாதை கூடும்.

துலாம்: யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். நெருங்கியவர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்தி பேசுவார்கள். வேலைச்சுமை அதிகரிக்கும். வாகனம் செலவு வைக்கும்.

விருச்சிகம்: நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். தடைபட்ட திருமண பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள்.

தனுசு: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விலகியிருந்த சொந்தபந்தங்கள் உங்களைத் தேடி வருவார்கள். உங்கள் முடிவுகள் அனைவரும் ஏற்கும்படி இருக்கும்.

மகரம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். உங்களின் நீண்டநாள் கனவு நனவாகும். திடீர் பயணம் ஏற்படலாம்.

கும்பம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. கலைப்பொருட்கள் சேரும்.

மீனம்: சகோதரர் வகையில் நன்மை உண்டு. பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வாகன வசதி பெருகும்.


One minute newsராசி பலன்தினசரி ராசி பலன்12 ராசிகளுக்குமான பலன்கள்கடகம்ரிஷபம்கன்னிமிதுனம்விருச்சிகம்மேஷம்துலாம்தனுசு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author