Published : 31 Aug 2020 06:51 am

Updated : 31 Aug 2020 06:51 am

 

Published : 31 Aug 2020 06:51 AM
Last Updated : 31 Aug 2020 06:51 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

daily-horoscope

மேஷம்: உங்களின் நிர்வாகத் திறன் கூடும். பணவரவு உண்டு. பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். வெளியூர் பயணம் ஏற்படும்..

ரிஷபம்: எதிலும் உங்கள் கை ஓங்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வாகனத்தை சீர் செய்வீர்கள். கடன் தொகை வசூலாகும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.


மிதுனம்: அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியோ, உத்தரவாதமோ தர வேண்டாம். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் ஏற்படக் கூடும். எதிலும் நிதானம் தேவை.

கடகம்: வாகனம் வாங்குவீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். எதையும் மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து செயல்படுத்துவீர்கள். பணவரவு திருப்தி தரும். அரசியல்வாதிகளின் நட்பும், உதவியும் கிடைக்கும்.

கன்னி: உறவினர், நண்பர்களின் கனிவான விசாரிப்பால் ஆறுதல் அடைவீர்கள். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். மனைவிவழியில் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.

துலாம்: பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். கணவன் - மனைவி இடையே ஈகோ பிரச்சினை வந்து நீங்கும்.

விருச்சிகம்: சவாலான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். உங்களின் தனித்திறமை அனைத்திலும் பளிச்சிடும். விஐபிகளால் பாராட்டப்படுவீர்கள். சகோதரரால் நன்மை உண்டு.

தனுசு: பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். பிள்ளைகள் விரும்பியதை வாங்கித் தருவீர்கள்.. சொந்தபந்தங்களில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள்.

மகரம்: உங்களுடன் பழகிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை இனம்கண்டு ஒதுக்குவீர்கள். இடம், பொருள் ஏவலறிந்து பேசுங்கள். முன்கோபத்தை தவிருங்கள்.

கும்பம்: வறட்டு கவுரவத்துக்காக சேமிப்புகளை கரைக்காதீர்கள். வேலைச்சுமை, திடீர் பயணங்கள் வந்து போகும். கடன் பிரச்சினை அதிகமாகும். திட்டமிடாத செலவுகள் ஏற்படும்.

மீனம்: நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


Daily horoscope12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்இந்தநாள் உங்களுக்கு எப்படிராசி பலன்ஆன்மீகம்ஜோதிடம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author