இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு நல்ல தகவல் வரும்.

ரிஷபம்: பழைய பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். குலதெய்வ பிரார்த்தனைகளை குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள்.

மிதுனம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். பூர்வீக சொத்து கைக்கு வரும். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

கடகம்: திடீர் பணவரவு, செல்வாக்கு உண்டு. பழுதான வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள். மனதில் நிலவிவந்த அச்ச உணர்வு விலகும். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்: சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு சமயோசிதமாகப் பேசும் சாமர்த்தியம் வரும். ஓரளவு பணவரவு உண்டு. பால்ய நண்பரை சந்தித்து முக்கிய முடிவு எடுப்பீர்கள்.

கன்னி: வேலைச்சுமை அதிகரிக்கும். எளிதில் முடியும் விஷயங்கள்கூட இழுபறியாகும். வாயு கோளாறால் சில பிரச்சினைகள் ஏற்படக் கூடும். கலைப்பொருட்கள் சேரும்.

துலாம்: அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு. திடீர் செலவுகளும் இருக்கும். வாகனம், வீடு பராமரிப்பு செலவுகள் அதிகமாகும். வெளியூர் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள்.

விருச்சிகம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வீடு, மனை வாங்குவதற்கான காலம் கனிந்து வரும்.

தனுசு: புதிய திட்டங்கள் நிறைவேறும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள். பணவரவு திருப்தி தரும்.

மகரம்: சோம்பல் நீங்கி உற்சாகமாக காணப்படுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். புத்துணர்ச்சியுடன் காணப்படவீர்கள்.. நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள். திடீர் பயணம் ஏற்படலாம்.

கும்பம்: வீண் பயம், கவலைகள் வந்து நீங்கும். பேச்சில் நிதானம் அவசியம். மின்சார சாதனங்களை கவனமாக கையாளுங்கள். அக்கம்பக்கத்தினர் எரிச்சலை ஏற்படுத்துவார்கள்.

மீனம்: குடும்பத்தில் நிம்மதி உண்டு. அலைச்சல் குறையும். வாகனம் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். மனைவிவழி உறவினர்களால் அனுகூலம் உண்டு. பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in