Published : 20 Aug 2020 06:29 AM
Last Updated : 20 Aug 2020 06:29 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வாகனம் செலவு வைக்கும்.

ரிஷபம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் ஏற்படும். நவீன மின்சாதனங்கள் வாங்குவர்கள்.

மிதுனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். வாகனத்தை சீர் செய்வீர்கள்.

கடகம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.

சிம்மம்: பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். சகோதரரிடம் கருத்துவேறுபாடு ஏற்படும்.

கன்னி: யாருக்காகவும் ஜாமீன், உத்தரவாத கையெழுத்திட வேண்டாம். பழைய பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண முயற்சிப்பீர்கள். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும்.

துலாம்: விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

விருச்சிகம்: எந்தப் பிரச்சினைகளையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். திடீர் பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

தனுசு: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். கலைப்பொருட்கள் சேரும்.

மகரம்: உங்களுடைய பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படுவது நல்லது. சில காரியங்களை பலமுறை முயன்று முடிப்பீர்கள். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை.

கும்பம்: குடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். கருத்து வேறுபாடால் பிரிந்த உறவினர்கள் திரும்பி வருவார்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்..

மீனம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. சொத்து தொடர்பான வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x