இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனுக்குடன் முடியும்.

ரிஷபம்: ஞாபக மறதியால் பிரச்சினைகள் வந்து நீங்கும். குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். பணப் பற்றாக்குறை நீடிக்கும்.

மிதுனம்: சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். யாருக்காகவும் ஜாமீன், உத்தரவாதக் கையெழுத்திட வேண்டாம்.

கடகம்: குடும்பத்தினருடன் மனம்விட்டு பேசுவீர்கள். நம்பிக்கைக்கு உரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர் உதவுவார்.

சிம்மம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள்.

கன்னி: கணவன் - மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். மனைவிவழி உறவினர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவார்கள்.

துலாம்: செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள்.

விருச்சிகம்: தன் பலம் பலவீனத்தை உணர்ந்து செயல்படுவீர்கள். சகோதரர்களால் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். பணவரவு திருப்தி தரும்.

தனுசு: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

மகரம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

கும்பம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி வரும்.

மீனம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in