இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்: சகோதரர் வகையில் ஒற்றுமை பிறக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். பால்ய நண்பரை சந்தித்து மகிழ்வீ்ரகள்.

ரிஷபம்: குடும்பத்தாரின் விருப்பங்களை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள்.

மிதுனம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். அநாவசிய செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

கடகம்: எதிர்பார்த்த காரியங்களில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். திடீ்ர பயணம் உண்டு.

சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். சொத்து பிரச்சினைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

கன்னி: நீண்டநாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பணவரவு உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வீர்கள்.

துலாம்: சிக்கலான, சவாலான காரியங்களை எல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். உறவினர், நண்பர்களை பகைத்து கொள்ள வேண்டாம். வாகனம் திடீர் செலவு வைக்கும்.

விருச்சிகம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். உடல்நலத்தில் கவனம் தேவை. சகோதரருடன் கருத்துவேறுபாடு ஏற்படும்.

தனுசு: குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி ஒற்றுமை பிறக்கும். மற்றவர்களின் மனநிலையை உணர்ந்து பேசும் பக்குவம் உண்டாகும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும்.

மகரம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.

கும்பம்: விருந்தினர் வருகையால் குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.

மீனம்: பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். பணப் பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து ஏமாந்து விடாதீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in