Published : 02 Jul 2020 06:20 AM
Last Updated : 02 Jul 2020 06:20 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: அலைச்சலும், செலவுகளும் அடுத்தடுத்து ஏற்படும் நீங்கள் நல்லது சொல்லப் போய் சிலர் அதை தவறாகப் புரிந்து கொள்வார்கள். உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

ரிஷபம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கு ஏற்பாடாகும்.

மிதுனம்: வேற்றுமொழி, மதத்தினர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் குறித்து சாதகமான பதில் வரும். பணவரவு திருப்தி தரும்.

கடகம்: பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். நீண்டநாள் பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.

சிம்மம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பழைய வீட்டை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பணப் பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.

கன்னி: விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். மனஇறுக்கம் நீங்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். ஆபரணங்கள் வாங்கத் திட்டமிடுவீர்கள்.

துலாம்: தடைபட்ட வேலைகளை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். விலகியிருந்த உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். அக்கம்பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

விருச்சிகம்: மறைமுக எதிர்ப்பு ஏற்படக்கூடும். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பழைய கடன் பிரச்சினை தூக்கத்தைக் கெடுக்கும். மூத்த சகோதரரால் செலவு ஏற்படும்.

தனுசு: திடீர் பயணங்கள், தூக்கமின்மை ஏற்படும். அரசு விவகாரங்களில் அலட்சியம் காட்ட வேண்டாம். உடன்பிறந்தவர்களால் சங்கடங்கள் வந்து நீங்கும். வாகனம் செலவு வைக்கும்.

மகரம்: சமூகத்தில் பிரபலமானவருக்கு நெருக்கமாவீர்கள். சொத்து தொடர்பான வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பங்கு வர்த்தகம் மூலம் பணம் வரும். முக்கிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

கும்பம்: உறவினர் மத்தியில் அந்தஸ்து உயரும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். கலைப்பொருட்கள் சேரும்.

மீனம்: நினைத்த காரியங்கள் மளமளவென்று நிறைவேறும். கல்வியாளர், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். குடும்பத்தில் அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x