Published : 30 Jun 2020 06:23 am

Updated : 30 Jun 2020 06:25 am

 

Published : 30 Jun 2020 06:23 AM
Last Updated : 30 Jun 2020 06:25 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

daily-horoscope

மேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள்.

ரிஷபம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு தக்கசமயத்தில் கிட்டும். வீடு, வாகனத்தை சீர்செய்வீர்கள்.

மிதுனம்: சாதுர்யமாகச் செயல்பட்டு காரியங்களை முடிப்பீர்கள். மனதில் நிலவிய குழப்பம் நீங்கி அமைதி ஏற்படும். கணவன் - மனைவி இடையே நிலவிய கருத்துவேறுபாடுகள் நீங்கும்.

கடகம்: சவால்கள், ஏமாற்றங்களைத் தாண்டி வெற்றி அடைவீர்கள். குடும்பத்தினரை கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பீர்கள். கடனை பைசல் செய்ய வழி பிறக்கும். கலைப்பொருட்கள் சேரும்.

சிம்மம்: வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

கன்னி: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்துவந்த தொல்லைகள் அகலும். பணவரவு திருப்தி தரும்.

துலாம்: ஒருவித படபடப்பு வந்து செல்லும். கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்சினை ஏற்படக் கூடும். தாழ்வுமனப்பான்மை அடிக்கடி தலைகாட்டும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாதீர்கள்.

விருச்சிகம்: யாரையும் அநாவசியமாக பகைத்துக் கொள்ளாதீர்கள். சகோதரர் வகையில் சில பிரச்சினைகள் ஏற்படக் கூடும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

தனுசு: குடும்பத்தில் குதூகலமான சூழல் நிலவும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். பிள்ளைகளின் விருப்பங்களை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். உடல் நிலை சீராக இருக்கும்.

மகரம்: இழுபறியாக இருந்துவந்த காரியங்கள் இன்று முடியும். சொந்தபந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். உங்களின் செயல்பாடுகளில் புத்திசாலித்தனம் வெளிப்படும்.

கும்பம்: வீண்செலவுகளைத் தவிர்த்து சேமிக்கும் எண்ணம் வரும். பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்ப சூழ்நிலையறிந்து பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

மீனம்: எந்த காரியத்தைத் தொட்டாலும் பலமுறை முயன்று முடிக்க வேண்டி வரும். உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Daily horoscopeஇந்தநாள் உங்களுக்கு எப்படி12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்Astrologyஜோதிடம்ஆன்மீகம்ராசி பலன்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author