இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்: மூத்த சகோதரரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உங்கள் ஆலோசனை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். திடீர் பயணம் ஏற்படக் கூடும்.

ரிஷபம்: கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடுகள் நீங்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவது குறித்து திட்டமிடுவீர்கள்

மிதுனம்: பிள்ளைகளின் உயர் கல்வி குறித்து முக்கிய முடிவு எடுப்பீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லைகள் விலகும். குடும்பத்துடன் புண்ணிய தலங்கள் செல்ல திட்டமிடுவீர்கள்.

கடகம்: குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் நீங்கி அமைதி திரும்பும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். பணவரவு உண்டு.

சிம்மம்: பழைய இனிய சம்பவங்களை அடிக்கடி நினைவுகூர்வீரகள். முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண்டாம். பிற்பகலுக்குப் பின்னர் தடைபட்ட வேலைகள் முடியும்.

கன்னி: கணவன் - மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போவது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். இளைய சகோதரர் வகையில் சில பிரச்சினைகள் வரும்.

துலாம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். பிள்ளைகள் நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். சகோதரர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு.

விருச்சிகம்: உங்களின் முயற்சிகளுக்கு உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். சகோதரர் பாசமழை பொழிவார். சாதுர்யமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

தனுசு: குடும்பச் சூழ்நிலை அறிந்து பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். எதிர்பார்த்த வேலை தடையின்றி முடியும். பணவரவு உண்டு.

மகரம்: நினைத்த வேகத்தில் வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். பிற்பகல் முதல் குழப்பங்கள் நீங்கி எதிலும் தெளிவு பிறக்கும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.

கும்பம்: மகளின் கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக அமையும். அடுத்தடுத்த வேலைகளால் சலிப்பு ஏற்படும். வீடு, வாகனத்தை சீரமைப்பீர்கள். அக்கம்பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

மீனம்: மனசாட்சிக்கு விரோதமின்றி செயல்பட வேண்டும் என்று நினைப்பீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டு. ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து சேமிக்கும் எண்ணம் ஏற்படும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in