Published : 24 Jun 2020 06:33 am

Updated : 24 Jun 2020 06:33 am

 

Published : 24 Jun 2020 06:33 AM
Last Updated : 24 Jun 2020 06:33 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

daily-horoscope

மேஷம்: வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் அதிகரிக்கும். திடீர் பயணம் ஏற்படக் கூடும்.

ரிஷபம்: நீண்டநாள் பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்து வந்த ஈகோ பிரச்சினைகள் நீங்கும். பணவரவு உண்டு.

மிதுனம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் உண்டாகும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.

கடகம்: உடல் உஷ்ணத்தால் சில அவஸ்தைகள் ஏற்படலாம். யாருக்கும், எதற்காகவும் உறுதிமொழியோ, உத்தரவாதமோ தர வேண்டாம். பொதுக்காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

சிம்மம்: அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. அரசு அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள். திடீர் பயணங்கள் வரும். விலகியிருந்த நெருங்கிய உறவினர், நண்பர்கள் திரும்ப வருவார்கள்.

கன்னி: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். எதிர்ப்புகள், ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

துலாம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.

விருச்சிகம்: சவாலான விஷயங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். திடீர் பயணத்தால் ஆதாயம் உண்டு. அக்கம்பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள். தாயாரின் உடல்நலம் சீராகும்.

தனுசு: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சொந்தபந்தங்கள் தேடிவந்து பேசுவார்கள். வேலை முயற்சிகள் தாமதமாகும். வீடு, வாகன பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

மகரம்: இங்கிதமாகவும், இதமாகவும் பேசி எல்லோரையும் கவருவீர்கள். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கவுரவமும் ஒருபடி உயரும். நீண்டநாள் ஆசை நிறைவேறும். பணவரவு உண்டு.

கும்பம்: சமயோசிதமாகச் செயல்பட்டு பல காரியங்களை முடிப்பீர்கள். கடனை பைசல் செய்வீர்கள். மனைவிவழி உறவினர்களால் அன்புத்தொல்லைகள் உண்டு. விருந்தினர் வருகை உண்டு.

மீனம்: கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். உங்களின் முயற்சிகளுக்கு சகோதரர் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு பெரிய பொறுப்பு தேடிவரும்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!


Daily horoscopeAstrologyஇந்தநாள் உங்களுக்கு எப்படி12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்ஜோதிடம்ஆன்மீகம்ராசி பலன்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author